வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

Tag: cm mk stalin angry speech

மூவர்ண கொடியை போற்றுவோம்…மூட அரசியல்தனத்தை அடக்குவோம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

மூவர்ண கொடியை போற்றுவோம்…மூட அரசியல்தனத்தை அடக்குவோம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: இந்திய விடுதலையின் பவள விழா ஆண்டில் மூவர்ண கொடியையையும், விடுதலைக்காக பாடுபட்ட உண்மையான தியாகிகளையும் போற்றுவோம். தேசிய கொடி பொருத்தப்பட்ட அமைச்சரின் கார் மீது செருப்பு வீசி விடுதலை நாளின் பவள விழா மகத்துவத்தை மலிவுபடுத்தி இருக்கின்றனர். அமைச்சரின் கார் மீது செருப்பு வீசியும், தேசிய கொடியை அவமதித்தும் கலவரம் செய்ய முயன்றவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் சட்டப்படி கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.இது தமிழ்நாடு இங்கே உங்கள் அரசியல் விளையாட்டு எடுபடாது. இந்தியாவின் பன்முகத்தன்மையையும், ஒருமைப்பாட்டையும் மதவெறி அரசியலால் சிதைத்து விடலாம் என சிலர் நினைக்கிறார்கள். தாங்கள்தான் தேசப்பக்திக்கு ஒட்டுமொத்த குத்தகைகாரர்கள் என நினைத்து வரம்...
சிறு தவறு நடந்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பேன் – தூத்துகுடியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சிறு தவறு நடந்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பேன் – தூத்துகுடியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், முதல்வர் ஸ்டாலின்
  மக்களின் நம்பிக்கையை காப்பாற்ற சிறு தவறு நடந்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பேன் என புதிதாக பொறுப்பேற்றுள்ள உள்ளாட்சி உறுப்பினர்களுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக இன்று இரவு தூத்துக்குடியில் எட்டயபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் முன்னாள் முதல்வர் கலைஞருக்கு வெண்கலத்தால் அமைக்கப்பட்டுள்ள ஆளுயரச் சிலையை முதல்வர் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து, விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தூத்துக்குடி மாவட்டக் கழக அலுவகத்தில் கலைஞரின் திருவுருவச்சிலையை திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை வழங்கிய மாவட்ட கழகத்திற்கும், நாடாளுமன்ற உறுப்பினர் தங்கை கனிமொழிக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கலைஞர் மறைவுக்கு பின்னர்,...
தமிழர்கள் இந்தி மொழிக்கு எதிரானவர்கள் இல்லை இந்தி ஆதீக்கத்திற்கு எதிரானவர்கள் – முதல்வர் ஸ்டாலின் பளீச்

தமிழர்கள் இந்தி மொழிக்கு எதிரானவர்கள் இல்லை இந்தி ஆதீக்கத்திற்கு எதிரானவர்கள் – முதல்வர் ஸ்டாலின் பளீச்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  குடியரசு தின அலங்கார ஊர்தி அணிவகுப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்ட தமிழக ஊர்திக்கு திட்டமிட்டு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக மத்திய அரசு கூறியுள்ள காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்   மொழிப்போர் தியாகிகள் தினத்தையொட்டி திமுக மாணவரணி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மொழிப்போர் தியாகிகளின் தியாகத்தால் தமிழினம் மேன்மை அடைந்து உள்ளதாக புகழாரம் சூட்டினார். செம்மொழி தகுதியை தமிழக்கு பெற்றுத் தந்தது, மெட்ராஸ் பெயரை சென்னை என மாற்றியது தமிழில் வழிபாடு செய்யும் உரிமையை வழங்கியது என திமுக அரசின் திட்டங்களை பட்டியலிட்டார். தமிழ், தமிழர் என்று பேசுவது குறுகிய மனப்பான்மை அல்ல என்று கூறிய முதலமைச்சர், ஹிந்திக்கு எதிரானவர்கள் அல்ல, ஹிந...