திங்கட்கிழமை, மே 13
Shadow

Tag: திமுக

வரும் 24ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முதல்வர் பிரசாரம்!

வரும் 24ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முதல்வர் பிரசாரம்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 31-ந் தேதி தொடங்கியது. நேற்றுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்தது. மேலும், தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், போட்டியிடும் கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து வரும் 24ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுப்படவுள்ளார். மேலும், 19ம் , 20ம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காங். வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்....
பாஜகவை திட்டக்கூடாது என கூறி முழு சங்கியாக சீமான் மாறியதால் திண்டுக்கல் நாம் தமிழர் நிர்வாகிகள் கூண்டோடு விலகி திமுகவில் இணைந்தனர்!

பாஜகவை திட்டக்கூடாது என கூறி முழு சங்கியாக சீமான் மாறியதால் திண்டுக்கல் நாம் தமிழர் நிர்வாகிகள் கூண்டோடு விலகி திமுகவில் இணைந்தனர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
    பாஜகவின் முழு சங்கியாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டை கூறியும், சீமானை கண்டித்தும் நாம் தமிழர் கட்சியின் திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் வினோத் தலைமையில் கூண்டோடு ராஜினாமா செய்த நிர்வாகிகள் உட்பட 500க்கும் மேற்பட்டோர், நாம் தமிழகர் கட்சியில் இருந்து விலகி அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் திமுகவில் இணைந்தனர். திண்டுக்கல் மாவட்டம் நாம் தமிழர் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் வினோத் ராஜசேகரன் இளைஞர் பாசறை செயலாளர் இமானுவேல் பழனி தொகுதி செயலாளர் ஈஸ்வரன் தொழிற்சங்க செயலாளர் டேவிட் உட்பட 10க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் 500க்கும் மேற்பட்டவர்கள், நாம் தமிழர் கட்சியில் இருந்து கூண்டோடு காலி செய்து திண்டுக்கல்லில் உள்ள திமுக கட்சி அலுவலகத்தில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி தலைமையில் தங்களை திமுகவ...
முதல்வர் பழனிசாமிக்கு ஐகோர்ட்டு நோட்டீசு!

முதல்வர் பழனிசாமிக்கு ஐகோர்ட்டு நோட்டீசு!

HOME SLIDER, NEWS, politics
ரூ.1 கோடி கேட்டு திமுக நிர்வாகி வழக்கு முதல்வர் பழனிசாமிக்கு ஐகோர்ட்டு நோட்டீசு! கோவை தி.மு.க. நிர்வாகியான சூலூர் ஏ. ராஜேந்திரன் கடந்த ஆண்டு மார்ச் 19-ந்தேதி சென்னையிலிருந்து கோவைக்கு ரெயிலில் சென்றுள்ளார். அவருக்கு நீரழிவு பிரச்சினை இருப்பதால் மேல்படுக்கையிலிருந்து கீழே இறங்கும்போது, நிலை தடுமாறி கீழ் படுக்கையில் இருந்த பெண் மீது விழுந்ததாக கூறப்படுகிறது இதுதொடர்பாக ரெயில்வே நிர்வாகம் மற்றும் காவல்துறையில் அந்த பெண் வாய்மொழி புகார் அளித்த நிலையில், தனது செயல்பாடு உள்நோக்குடன் நடந்தது இல்லை என்றும், நீரழிவு பிரச்சினை இருப்பதால் அவசரமாக இறங்கியதாகவும் சூலூர் ராஜேந்திரன் அந்த பெண்ணிடம் விளக்கம் அளித்துள்ளார். இதன்பின்னர் தன் புகாரில் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என பெண் தெரிவித்துள்ளார். ஆனால் 15 நாட்களுக்கு பிறகு சூலூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ரெயில் பயணத்...
உதயநிதி ஸ்டாலின் மீது செங்கல் திருட்டு புகார்!

உதயநிதி ஸ்டாலின் மீது செங்கல் திருட்டு புகார்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
உதயநிதி ஸ்டாலின் மீது செங்கல் திருடியதாக புகார்! திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விளாத்திகுளத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த போது,மதுரையில் 3 ஆண்டுகளுக்கு முன் அதிமுகவும், பாஜகவும் சேர்ந்து மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டிக் கொடுத்தார்கள். உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? அதைக் கையோடு எடுத்து வந்துவிட்டேன். மதுரையில் அதிமுகவும், பாஜகவும் கட்டிக்கொடுத்த எய்ம்ஸ் மருத்துவமனை இதுதான்” எனக் கூறி ஒரு செங்கல்லை எடுத்துக்காட்டினார். மேலும் இது தான் அவர்கள் கட்டிக்கொடுத்த எய்ம்ஸ் மருத்துவமனை என்று கூறினார். உதயநிதி ஸ்டாலின் செங்கலை காண்பித்து தேர்தல் பிரச்சாரம் செய்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி கலக்கியது. இந்நிலையில் அவர் எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் இருந்த செங்கலை திருடியதாக அவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாஜக நிர்வாகி நீதிபாண்டியன் கோவில்பட்டி காவல்நி...
துரை முருகன் ஜாதி பாசத்தால் காற்றில் கரைந்த ஸ்டாலின் சவால்!

துரை முருகன் ஜாதி பாசத்தால் காற்றில் கரைந்த ஸ்டாலின் சவால்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  துரைமுருகனின் "ஜாதி" பாசத்தால் காற்றில் கரைந்த ஸ்டாலின் சவால்..! தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இல்லை. அதன் காரணமாக நடக்க உள்ள 2021 சட்டசபை தேர்தலில் எப்படியும் ஆட்சியை பிடித்து விட வேண்டும் என பல மாதங்களுக்கு முன்பே ஒன்றிணைவோம் வா நிகழ்ச்சியில் தொடங்கி உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என பல்வேறு வகையான நிகழ்வுகளை நடத்தி தேர்தலுக்கு தயார் ஆனது திமுக. அதே நேரம் 1951ம் ஆண்டில் இருந்து கடந்த தேர்தல்வரை அரக்கோணம் தொகுதியை எந்த கட்சி வெற்றி பெருகிறதோ அந்த கட்சிதான் ஆட்சியை பிடித்த வரலாறு உண்டு. திமுக கோட்டையாக இருந்த அரக்கோணம் தொகுதியை தவறான வேட்பாளர் தேர்வால் அதிமுகவிடம் தொடர்ந்து 2 முறை இழந்து நிற்கிறது திமுக. இந்த சூழலில் திமுக தலைவர் ஸ்டாலின் பனப்பாக்கம் பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது " அரக்கோணம் தொகுதியில் உள்ள எம்.எல்.ஏ. ரவி அமைச்சர்களுக்கு ...
கன்யாகுமரியில்  திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய கனிமொழி எம்பி. 

கன்யாகுமரியில்  திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய கனிமொழி எம்பி. 

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
கன்யாகுமரியில்  திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய கனிமொழி எம்பி. திருக்குறளை எழுதிய திருவள்ளுவரைத் தமிழர்கள் மட்டுமின்றி உலக மக்கள் அனைவரும்  போற்றி வருகின்றனர்.  திருக்குறளை உலகப் பொதுமறை என்ஃஅ போற்றி வருகின்றனர்.  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தனது ஆட்சி காலத்தில் கன்யாகுமரியில் திருவள்ளுவருக்குப் பிரம்மாண்டமான சிலை ஒன்றை அமைத்து அவர் புகழை மேலும் பரப்பினார். திமுக மக்களவை உறுப்பினரான கனிமொழி இன்று கன்யாகுமரி சென்று திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.   இது குறித்து அவர் தனது டிவிட்டரில், “இன்று கன்னியாகுமரியில் வள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தினேன். அவரது அறிவார்ந்த கருத்துக்கள் இன்றும் இளைஞர்களுக்கும் பெரியவர்களுக்கும் ஊக்க சக்தியாக இருப்பவை. தலைவர் கலைஞர் அவர்களால் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான வள்ளுவர் சிலை சரியான பராமரிப்பில்லாமல...
பேராசிரியர் பிறந்த நாளில் அரக்கோணத்தில் ஏழைகளுக்கு பா.எழில் இனியன் உணவு வழங்கினார்!

பேராசிரியர் பிறந்த நாளில் அரக்கோணத்தில் ஏழைகளுக்கு பா.எழில் இனியன் உணவு வழங்கினார்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அரக்கோணம் நகரத்தில் ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளர் சாதனை செம்மல் அண்ணன் ஆர்.காந்தி எம்.எல்.ஏ.அவர்கள் அறிவுருத்தல் படி முன்னாள் கழக பொதுச்செயலாளர் இனமான பேராசிரியர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு திருவுருவ படத்திற்கு மாவட்ட வழக்கறிஞர் துணை அமைப்பாளர் பா.எழில்இனியன் பூ தூவி மரியாதை செய்தார். இந்த நிகழ்வில் நகர கழக துணை செயலாளர் எ.அன்புலாரன்ஸ், மாவட்ட பிரதிநிதிகள். வி.எஸ்.ஆர்.ரவி பூக்கடை என்.அரி மாவட்ட தொண்டர் அணி துனை அமைப்பாளர் பி.ஆர்.விமல் , மாவட்ட இல.அணி துணை அமைப்பாளர் பி.மூர்த்தி வி.மோகன் எஸ்.எழிலரசு சி.வில்வநாதன் வி.ரவி.சம்சுதீன் கே.எம்.எஸ்.பழனி ஆர்.மோகன்ராஜ் வழக்கறிஞர்.ராமமூர்த்தி ஆர்.பாலாஜி எ.எச்.ஆதம் டி.சாம் என்.எஸ்.கேசவன் வி.மனோகரன் வி.முருகன் விணோத் எஸ்.குமார் என்.நவீன் எ.அஅருண் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்...
பெண்களுக்கு எதிரான குற்றத்தில் உத்தரபிரதேசம் முதலிடம், தமிழகம் இரண்டாமிடம் – ஸ்டாலின் குற்றச்சாட்டு

பெண்களுக்கு எதிரான குற்றத்தில் உத்தரபிரதேசம் முதலிடம், தமிழகம் இரண்டாமிடம் – ஸ்டாலின் குற்றச்சாட்டு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  உ.பி. பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு நீதி கேட்டு கனிமொழி தலைமையில், ஆளுநர் மாளிகை நோக்கி திமுக மகளிர் அணி பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும்போது ‘‘ஹத்ராஸ் போன்ற பாலியல் கொடுமைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதே திமுகவின் கோரிக்கை. பெண்களுக்கு எதிரான குற்றத்தில் உத்தரபிரதேசம் முதலிடம், தமிழகம் இரண்டாமிடம். உ.பி. இன்று ரத்த பிரதேசமாக மாறிக் கொண்டிருக்கிறது. தமிழகம் தேர்தலை எதிர்நோக்கி உள்ளது. தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும். திமுக ஆட்சியை பிடித்த பிறகு, மாவட்டந்தோறும் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும்’’ என்றார். முன்னதாக திமுக எம்.பி. கனிமொழி கூறுகையில் ‘‘உ.பி.யில் பாலியல் வன்முறை அதிகரித்து வருகிறது. பசு மாடுகளை பாதுகாக்கும் ஆர்வத்தை பெண்கள் மீது காட்டுவதில்லை. பெண்களுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பின்மை...
DMK to take out rally against Hathras rape

DMK to take out rally against Hathras rape

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  DMK to take out rally against Hathras rape Condemning the Centre over the handling of Hathras rape and murder case, the DMK announced a march by its women’s wing to Raj Bhavan today. MK Stalin also sought an inquiry headed by a Supreme Court judge to ensure justice to the victim’s family. The rally, to be led by women’s wing secretary K Kanimozhi, was being organised to urge Governor Banwarilal Purohit to reflect the sentiments to Centre, Stalin said in a statement. Appealing to the women cadre to turn up in large numbers with torches to ignite hope among the people fighting for justice across the country, Stalin said, “Union Minister Amit Shah who holds Home portfolio should answer (for the incident).”
நானும் விவசாயிதான்’ என்று எடப்பாடி பழனிசாமி சொல்லிக் கொள்கிறாரே தவிர, விவசாயியாக நடந்து கொள்ளவில்லை – ஸ்டாலின் .

நானும் விவசாயிதான்’ என்று எடப்பாடி பழனிசாமி சொல்லிக் கொள்கிறாரே தவிர, விவசாயியாக நடந்து கொள்ளவில்லை – ஸ்டாலின் .

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நானும் விவசாயி, நானும் விவசாயிதான்’ என்று எடப்பாடி பழனிசாமி சொல்லிக் கொள்கிறாரே தவிர, விவசாயியாக நடந்துகொள்ளவில்லை. கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் காணொலி காட்சி மூலம் அக்கட்சியின் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- கொரோனா கால ஊரடங்கு தொடங்கியதில் இருந்தே, தினமும் காலையும், மாலையும் காணொலி மூலமாக தமிழ்நாடு முழுவதும் இருக்கும் தொண்டர்களை, நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடி கொண்டே இருக்கிறேன். எந்தச் சூழலிலும் நம்மால் கட்சிப் பணியாற்ற முடியும் என்பதற்கு உதாரணமாகவே இதனைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன். இதன் உச்சக்கட்டமாக 3,700-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட பொதுக்குழுவையே காணொலி மூலமாக நடத்தி கட்சியின் பொதுச் செயலாளரையும், பொருளாளரையும் அதில் தேர்வு செய்தோம். தற்போது 530-க்கும் மேற்பட்ட இடங்களிலி...