வியாழக்கிழமை, மே 16
Shadow

துரை முருகன் ஜாதி பாசத்தால் காற்றில் கரைந்த ஸ்டாலின் சவால்!

 

துரைமுருகனின் “ஜாதி” பாசத்தால் காற்றில் கரைந்த ஸ்டாலின் சவால்..!

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இல்லை.

அதன் காரணமாக நடக்க உள்ள 2021 சட்டசபை தேர்தலில் எப்படியும் ஆட்சியை பிடித்து விட வேண்டும் என பல மாதங்களுக்கு முன்பே ஒன்றிணைவோம் வா நிகழ்ச்சியில் தொடங்கி உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என பல்வேறு வகையான நிகழ்வுகளை நடத்தி தேர்தலுக்கு தயார் ஆனது திமுக.

அதே நேரம் 1951ம் ஆண்டில் இருந்து கடந்த தேர்தல்வரை அரக்கோணம் தொகுதியை எந்த கட்சி வெற்றி பெருகிறதோ அந்த கட்சிதான் ஆட்சியை பிடித்த வரலாறு உண்டு.

திமுக கோட்டையாக இருந்த அரக்கோணம் தொகுதியை தவறான வேட்பாளர் தேர்வால் அதிமுகவிடம் தொடர்ந்து 2 முறை இழந்து நிற்கிறது திமுக.

இந்த சூழலில் திமுக தலைவர் ஸ்டாலின் பனப்பாக்கம் பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது ” அரக்கோணம் தொகுதியில் உள்ள எம்.எல்.ஏ. ரவி அமைச்சர்களுக்கு இணையாக முறைகேடான வகையில் சம்பாதித்து இருக்கிறார். திமுக ஆட்சிக்கு வந்ததும் ரவி சிறைக்கு செல்வார்” என ஆவேசம் காட்டி சவால் விட அரக்கோணம் பரபரப்பானது.

அரக்கோணம் தொகுதியில் திமுக சார்பில் கடந்த முறை போலவே இந்த முறையும் பலர் விருப்ப மனு தாக்கல் செய்திருந்தாலும், ஐபேக் பரிந்துரை வழக்கறிஞர் எழில் இனியன் என்பவருக்கும், அவரை அடுத்து பவானி வடிவேலு என்பவருக்கும் இருந்தது.

பவானி வடிவேலு எனபவர் கலப்பு மணம் புரிந்தவர் என்பதால் தனித் தொகுதியில் போட்டியிட அனுமதிக்க மாட்டோம் என கட்சியினர் கடந்த முறை கடும் எதிர்ப்பு தெரிவித்த விவகாரத்தால் இந்த முறையும் அவர் ஐபேக் பட்டியலில் இருந்தாலும் வேட்பாளர் தேர்வில் பின் தங்கினார்.

இவருக்கு எப்படியும் சீட்டு வழங்கிட வேண்டும் என கடுமையாக முயற்சித்த திமுக பொதுச் செயலாளர் துரை முருகனுக்கு இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

காரணம், பவானி பட்டியல் இனத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அவரது கணவர் வடிவேலு தன் ஜாதியை சேர்ந்தவர் என்பதால் துரை முருகன் கடும் முயற்சி எடுத்தார்.

ஆனால் பாவம் அவர் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாகி வழக்கறிஞர் எழில் இனியன் என்பவர் வேட்பாளர் தேர்வில் இடம் பிடித்ததாக கூறப்படுகிறது.

தான் பொதுச் செயலாளராக இருந்தும் தன் ஆதரவாளருக்கு சீட் வாங்கித தராமல் போனால் அது தனக்கு பெரும் அவமரியாதையை ஏற்படுத்தும் என நினைத்துக் கொண்ட இந்த மாஜி மந்திரிதான் கூட்டணி பேச்சு வார்த்தையில் முக்கிய பங்கு வகித்தார்.

தன் ஆரவாளருக்கு கிடைக்காத தொகுதி கட்சியில் வேறு யாருக்கும் போய்விடக்கூடாது என முடிவு செய்து அரக்கோணத்தை விடுதலை சிறுத்தைகளுக்கு தள்ளி விட்டிருக்கிறார்.

இதில் வேதனையான உண்மை என்னவென்றால் அரக்கோணம் தொகுதி விசிக விருப்ப பட்டியலிலேயே இல்லை என்பதும், கடந்த தேர்தலுக்கு முந்ததைய தேர்தலில் நின்று பரிதாபமாக தோற்றவர்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

திமுக வெற்றி பெற வேண்டிய தொகுதியை தன் ஜாதி பாசத்தால் கூட்டணிக் கட்சிக்கு நாசுக்காக தாரை வார்த்த மாஜியின் செயல் லோக்கல் கட்சியினருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்த… அதே நேரம் அதிமுக வேட்பாளரும் இப்போதைய எம்.எல்.ஏ.வுமான ரவி ரொம்பவே உற்சாகமாகி தன் வெற்றி உறுதியானதாக பட்டாசு வெடித்து கொண்டாடிய சம்பவங்களும் தொகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எம்.எல்.ஏ.ரவி குறித்த ஸ்டாலின் சவால் தன் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவரின் ஜாதி பாசத்தாலேயே காற்றில் கரைந்து போய் விட்டது.

1951 முதல் கடந்த தேர்தல்வரை அரக்கோணம் தொகுதியில் வெற்றி பெரும் கட்சிதான் ஆட்சியை பிடித்துள்ளது. இந்த வரலாற்றை மெய்ப்பிக்கும் வகையில் மீண்டும் தவறான முடிவை எடுத்துள்ளது திமுக என்கிறார்கள் விவரம் அறிந்த தொகுதி பெருசுகள்.

இதற்கு காரணம், கேட்காத தொகுதியை தங்களுக்கு ஒதுக்கி 2 நாட்கள் ஆன நிலையிலும் இதுவரை வேட்பாளரை இறுதி செய்ய முடியாமல் விசிக குழப்பத்தில் உள்ளதை குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.

கட்சி தோற்றாலும் பரவாயில்லை தன் ஜாதிக்காரருக்கு சீட்டு கிடைத்தால் போதும் என சுய நலமாக செயல்படும் மாஜி மந்திரியின் அடுத்த ராஜ தந்திர நடவடிக்கையால் தான் குடியாத்தம் வேட்பாளராக அம்முலு என்பவர் அறிவிக்கப்பட்டார்.

இவர் கடந்த முறை கேவி குப்பம் தொகுதியில் போட்டியிட்டு கட்சியினர் கடும் எதிர்ப்பால் தோற்றுப் போனவர். காரணம் இவரும் கலப்பு மணம் புரிந்தவர். இவரது கணவரும் மாஜி மந்திரியின் ஜாதியை சேர்ந்தவர்.

இந்த முறை கேவி குப்பத்தில் மீண்டும் எதிர்ப்பு வரும் என யோசித்து குடியாத்தம் தொகுதியை வாங்கி கொடுத்திருக்கிறார்.

ஆக, கட்சி ஜெயிக்க வேண்டும், ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்ற எண்ணம் எதுவும் இல்லாமல் தோற்றாலும் பரவாயில்லை தன் ஜாதிக்காரருக்கு சீட்டு வழங்க வேண்டும் என்ற முடிவால் மாஜி மந்திரியின் நடவடிக்கை திமுக தலைமைக்கு எப்படி தெரியாமல் போனது என்பதுதான் புரியாத புதிர்.

அதோடு, ஐபேக் பரிந்துரை எப்படி இதுபோன்ற சிக்கல் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டது என்பதிலும் சந்தேகம் எழாமல் இல்லை.

பொதுச் செயலாளர் துரை முருகன் போன்றவர்களின் ஜாதிப் பாச நிலை நீடித்தால் திமுகவில் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் எந்த காலத்திலும் அதிகாரத்திற்கு வரவே முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

எது எப்படியோ தன் ஜாதி பாசத்தால் ஸ்டாலின் சவாலையே காற்றில் கரைய வைத்த மாஜி மந்திரி துரைமுருகனின் ராஜ தந்திரம் ஜெயிக்குமா தோற்குமா… காத்திருப்போம்!

453 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன