வியாழக்கிழமை, மார்ச் 28
Shadow

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தாய்வு திட்டத்தை தொடங்கி வைத்தார்!

தமிழ்நாடு அரசு இரண்டாண்டு கால “தமிழ்நாடு முதல்-அமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இளைஞர்களின் ஆற்றலையும், திறமையையும் பயன்படுத்தி, நிர்வாகச் செயல்முறைகளின் செயல்திறனை மேம்படுத்தி, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு திட்டங்கள் மற்றும் கொள்கைகளின் சேவை வழங்கலை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இத்திட்டம், திருச்சி பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனத்தை கல்வி பங்காளராக கொண்டு சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையால் ஒருங்கிணைக்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் மூன்று கட்டங்களாக தேர்வு நடத்தப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட 30 இளம் வல்லுநர்களுக்கு, அரசின் உயர் அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்டு 30 நாட்கள் வகுப்பறை பயிற்சி பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து சென்னையில் உள்ள அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியில் வழங்கப்படும்.

இதை தொடங்கி வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இளம் வல்லுநர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, ரகுபதி, பெரியகருப்பன், பழனிவேல் தியாகராஜன், மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

108 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன