வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

Tag: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தாய்வு திட்டத்தை தொடங்கி வைத்தார்!

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தாய்வு திட்டத்தை தொடங்கி வைத்தார்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், தமிழக அரசியல்
தமிழ்நாடு அரசு இரண்டாண்டு கால "தமிழ்நாடு முதல்-அமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இளைஞர்களின் ஆற்றலையும், திறமையையும் பயன்படுத்தி, நிர்வாகச் செயல்முறைகளின் செயல்திறனை மேம்படுத்தி, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு திட்டங்கள் மற்றும் கொள்கைகளின் சேவை வழங்கலை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டம், திருச்சி பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனத்தை கல்வி பங்காளராக கொண்டு சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையால் ஒருங்கிணைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் மூன்று கட்டங்களாக தேர்வு நடத்தப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட 30 இளம் வல்லுநர்களுக்கு, அரசின் உயர் அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்டு 30 நாட்கள் வகுப்பறை பயிற்சி பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து சென்னையில் உள்ள அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியில் வழங்கப்படும். இதை தொடங்...
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுடன் உறுதிமொழி ஏற்பு !

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுடன் உறுதிமொழி ஏற்பு !

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆங்காங்கே போதை பொருள் விற்கப்படுகிறது. இதனால் நாளுக்கு நாள் போதை மருந்தின் பயன்பாடும், அதற்கு அடிமையாகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி கொண்டு வருகிறது. போதை பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார். இது தொடர்பாக அவர் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கடந்த 5-ந்தேதி எழுதிய கடிதத்தில் போதை பொருட்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலுமாக ஒழிக்க உறுதி ஏற்றிருக்கும் தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பும், ஆதரவும் அளிக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இதன் தொடர்ச்சியாக சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகளுடன் ஆலோசனை நடத்தி போத...
விட்ராதீங்க முதல்வரே… பேரரசு அறிக்கை!

விட்ராதீங்க முதல்வரே… பேரரசு அறிக்கை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
விட்ராதீங்க முதல்வரே... பேரரசு அறிக்கை! பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான ‘சர்வதேச நாள்’ நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சியில் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதில், பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையும் அதைத்தொடர்ந்து அவர்கள் தற்கொலை செய்து கொள்வதுமான செய்தியைக் கேள்விப்படும் போது உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் அவமானமாக இருக்கிறது. குழந்தைகளுக்கான உதவி எண் 1098 அரசின் நடைமுறையில் உள்ளது. எந்தக் குழந்தையாக இருந்தாலும் தனக்கு ஒரு பாதிப்பு என்றால் 1098 என்ற எண்ணுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். ரகசியம் காத்து, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் இயக்குனர் பேரரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘நம் நாட்டில் கல்லூரிகள...
மக்கள் செல்வாக்கு அதிகம் பெற்ற சிறந்த முதல்-மந்திரிகளில் மு.க.ஸ்டாலினுக்கு முதலிடம்!

மக்கள் செல்வாக்கு அதிகம் பெற்ற சிறந்த முதல்-மந்திரிகளில் மு.க.ஸ்டாலினுக்கு முதலிடம்!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
மக்கள் செல்வாக்கு அதிகம் பெற்ற சிறந்த முதல்-மந்திரிகளில் மு.க.ஸ்டாலினுக்கு முதலிடம்! இந்தியாவில் முதல்- அமைச்சர்களின் செல்வாக்கு குறித்து ‘சி.என். ஒ.எஸ். ஒபினியோம்” என்ற அமைப்பு நடத்திய கணக்கெடுப்பில் நாட்டில் சிறந்த முதல்- அமைச்சர்களாக 5 முதல்-அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலிடம் பெற்றுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கணக்கெடுப்பு நடத்திய அமைப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:- தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின்   நாட்டிலேயே மிகவும் மக்கள் செல்வாக்கு பெற்ற முதல்- அமைச்சராக திகழ்கிறார். இந்த கணக்கெடுப்பில் அவர் பெற்றுள்ள நிகரப் புள்ளிகள் 67 ஆகும். அவருடைய மாநிலத்தில் (தமிழ்நாட்டில்) கணக்கெடுப்பு நடத்தப்பட்டவர்களில் 79 சதவீதம் பேர் அவருடைய தலைமையில் திருப்தி அடைந்து இருப்பதாக தெரிவித்து உள்ளனர். 1...
புழல்-செம்பரம்பாக்கம் ஏரிகளில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு!

புழல்-செம்பரம்பாக்கம் ஏரிகளில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
புழல்-செம்பரம்பாக்கம் ஏரிகளில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு! சென்னையின் குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் உள்ளன. தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக இந்த ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. புழல் ஏரியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி ஏரியின் கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ‌ஷட்டர்களும் பழுதுபார்க்கப்பட்டுள்ளன. 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் தற்போது 2,772 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 23 கனஅடி தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது. புழல் ஏரியில் 84 சதவீதம் அளவுக்கு நீர் நிரம்பி உள்ளது. முழு கொள்ளளவை விரைவில் எட்ட உள்ளதால் இந்த ஏரியை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஏரியின் ‌ஷட்டர்கள் சரியாக இயங்குகிறதா? என்பதை கேட்டறிந்தார். எ...
மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 24 தொழில் ஒப்பந்தங்கள்-41,695 பேருக்கு வேலைவாய்ப்பு!

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 24 தொழில் ஒப்பந்தங்கள்-41,695 பேருக்கு வேலைவாய்ப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 24 தொழில் ஒப்பந்தங்கள்-41,695 பேருக்கு வேலைவாய்ப்பு! இந்தியாவின் 75-வது சுதந்திரதினத்தை கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் செப்டம்பர் 20-ந்தேதி முதல் 26-ந் தேதி வரை ‘வர்த்தகம் மற்றும் வணிக வாரம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை, மாநிலத்தின் ஏற்றுமதித்திறனை வெளிப்படுத்தும் வகையில், சென்னை கலைவாணர் அரங்கில் “ஏற்றுமதியில் ஏற்றம்- முன்னணியில் தமிழ்நாடு” என்ற பெயரில் தமிழ்நாடு ஏற்றுமதி மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அவரது முன்னிலையில் ரூ.2120.54 கோடி முதலீட்டில் 41 ஆயிரத்து 695 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 24 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த முதலீடுகள் ஜவுளி, ரசாயனங்கள், தகவல் தொழில்நுட்ப சேவைகள், எக்கு பொருட்கள், தோல் ஆடைகள், பொது உற்...
தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் – கம்ப்யூட்டர் திரையில் எம்.எல்.ஏ.க்கள் காண ஏற்பாடு!

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் – கம்ப்யூட்டர் திரையில் எம்.எல்.ஏ.க்கள் காண ஏற்பாடு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் - கம்ப்யூட்டர் திரையில் எம்.எல்.ஏ.க்கள் காண ஏற்பாடு! தமிழக சட்டசபையில் கடந்த 2018-ம் ஆண்டில் காகிதமில்லா சட்டசபை என்ற திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) காகித வடிவில் தாக்கல் செய்யப்பட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் சட்டசபையில் காதிதமில்லா திட்டத்தை முழு அளவில் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் முதல் முறையாக எலக்ட்ரானிக் வடிவிலான முதல் நிதிநிலை அறிக்கை (இ-பட்ஜெட்) இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. அதுவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும். இ-பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார். அவர் சுமார் 1.30 மணி நேரம் பட்ஜெட்டை வாசிப்பார். அவர் வாசிக்கும் வாசகங்கள், எம்.எல்.ஏ.க...
மருத்துவ குழுவினருடன் நாளை மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

மருத்துவ குழுவினருடன் நாளை மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
மருத்துவ குழுவினருடன் நாளை மு.க.ஸ்டாலின் ஆலோசனை! தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. நோய் தொற்று கட்டுப்படுவதை பொறுத்து அவ்வப்போது அரசு தளர்வுகளையும் அறிவித்து வருகிறது. கடந்த மாதம் 28-ந்தேதி ஊரடங்கு கட்டுப்பாடுகளில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி நோய் தொற்று சதவீதத்தின் அடிப்படையில் 3 வகைகளாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. முதல் வகையில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. 2-வது வகையில் அரியலூர், கடலூர், தர்மபுரி உள்பட 23 மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. 3-வது வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் உள்ளன. இதில் 3-வது வகையில் இடம்பெற்றுள்ள 4 மாவட்டங்களுக்கும் கூடுதலான தளர்வுகள் அறிவிக்கப்பட்டன...
இன்று மாலை தமிழக அமைச்சரவை கூட்டம்!

இன்று மாலை தமிழக அமைச்சரவை கூட்டம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
இன்று மாலை தமிழக அமைச்சரவை கூட்டம்! தமிழ்நாட்டின் 16-வது சட்டசபையின் முதல் கூட்டம் கலைவாணர் அரங்கில் கடந்த 21-ந்தேதி கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் மறைந்த தலைவர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் சட்டசபையில் கொண்டு வரப்பட்டது. இது குறித்து சட்டசபையில் இடம்பெற்ற அனைத்து கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற விவாதம் நடந்தது. அவர்களின் கருத்துகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தி.மு.க. ஆட்சி குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். 3 தினங்கள் சட்டசபையில் நடந்த விவாதத்துக்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பதில் அளித்து பேசினார். இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 6 மணிக்கு அம...
டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு- மு.க.ஸ்டாலினுக்கு அளிக்கப்படும் சிறப்பு கவுரவம்!

டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு- மு.க.ஸ்டாலினுக்கு அளிக்கப்படும் சிறப்பு கவுரவம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு- மு.க.ஸ்டாலினுக்கு அளிக்கப்படும் சிறப்பு கவுரவம்! தமிழக முதல்- அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக   மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி செல்கிறார். நாளை மாலை சென்னையில் இருந்து சிறப்பு விமானத்தில் டெல்லி செல்லும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதன் பின்னர் நாளை மறுநாள் (17-ந் தேதி) முதல் பல்வேறு நிகழ்ச்சிகளில்   மு.க.ஸ்டாலின்  பங்கேற்கிறார். தொடர்ந்து 3 நாட்கள் டெல்லியில் தங்கி இருக்கும் அவர் தமிழகத்துக்கு தேவையான திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். நாளை மறுநாள் காலை டெல்லி லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடியை, முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின்  சந்தித்து பேசுகிறார். இந்த சந்...