வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

Tag: கமல்ஹாசன்

கமல்ஹாசனை சந்தித்த கவின்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சரவணன் மீனாட்சி' சீரியலில் நடித்து பிரபலமானவர் கவின். இதையடுத்து படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர், 'நட்புன்னா என்னானு தெரியுமா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்து கொண்டார். இதன் பின்னர் வெளியான'லிஃப்ட்' திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து நடிகர் கவின் தற்போது கணேஷ் கே பாபு இயக்கத்தில் 'டாடா' திரைப்படத்தில் நடித்துள்ளார். ஒலிம்பியா மூவிஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் பாக்யராஜ், அபர்ணா தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் கவின் கமல்ஹாசனை நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள கவின் 'இன்று கோவிலுக்கு ...
ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி சார்பில் கமல்ஹாசன் போட்டி!

ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி சார்பில் கமல்ஹாசன் போட்டி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, அரசியல், சினி நிகழ்வுகள், தமிழக அரசியல், நடிகர்கள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கே மீண்டும் சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சரும் மறைந்த திருமகன் ஈ.வெ.ரா.வின் தந்தையுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இல்லையென்றால் அவரது மனைவி வரலட்சுமி, 2-வது மகன் சஞ்சய் சம்பத், மறைந்த திருமகன் ஈ.வெ.ரா.வின் மனைவி பூர்ணிமா ஆகியோரில் ஒருவர் வேட்பாளராக தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இளங்கோவன் போட்டியிட விரும்பாதபட்சத்தில் தனது ஆதரவாளர் யாருக்காவது சீட் கேட்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனாலும் தொடர்ந்து இளங்கோவனை போட்டியிட அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக சமூக வலைதளங்களிலும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ...
தொடர்ந்து பார் புகழ் பெறுகிறது இந்தியா.. ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த கமல்!

தொடர்ந்து பார் புகழ் பெறுகிறது இந்தியா.. ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த கமல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் கடந்த மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்றது. இப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்தது. இதையடுத்து இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது. ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் 'ஆர்.ஆர்.ஆர்.' படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "தொட...
”கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞன் கமல்ஹாசன்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

”கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞன் கமல்ஹாசன்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

CINI NEWS, HOME SLIDER, politics, அரசியல், சினி நிகழ்வுகள், தமிழக அரசியல், நடிகர்கள்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனுக்கு இன்று 68-வது பிறந்த நாள் ஆகும். இதையொட்டி இன்று மக்கள் நீதிமய்யம் கட்சியினர் தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைத்தளத்தில் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது, தீராக் கலை தாகத்துடன் தன்னை இன்னும் இன்னும் பண்படுத்தி மிளிரும் சீரிளம் கலைஞானியும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரு மான அன்புத்தோழர் கமல் ஹாசனுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே வாழிய நின் கலைத்திறம் என்று பதிவிட்டுள்ளார்....
கமலுடன் இணையும் பிரபல நடிகை!

கமலுடன் இணையும் பிரபல நடிகை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
கமல்ஹாசனின் விக்ரம் படம் சமீபத்தில் திரைக்கு வந்து நல்ல வசூல் பார்த்த நிலையில் அடுத்து இந்தியன் 2 படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்த படம் விபத்து, கொரோனா போன்ற காரணங்களால் பல வருடங்களாக முடங்கி இருந்தது. இதையடுத்து படத்தை கைவிட்டு விட்டதாக இணையதளங்களில் பரவிய தகவலை தயாரிப்பு தரப்பில் மறுத்தனர். தற்போது படத்தின் இயக்குனர் ஷங்கர், தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தை முடித்து விட்டு இந்தியன்-2 படப்பிடிப்பை செப்டம்பர் மாதம் தொடங்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்து இருந்த காஜல் அகர்வால் படத்தில் இருந்து விலகி விட்டார். எனவே அவர் நடித்த காட்சிகளை நீக்கிவிட முடிவு செய்து உள்ளனர். காஜல் அகர்வாலுக்கு பதிலாக கமல்ஹாசன் ஜோடியாக நடிக்க இந்தி நடிகை தீபிகா படுகோனேவிடம் படக்குழுவினர் பேசி வருவத...
கமலுடன் மீண்டும்  இணையும் உதயநிதி!

கமலுடன் மீண்டும் இணையும் உதயநிதி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, அரசியல், சினி நிகழ்வுகள், செய்திகள், தமிழக அரசியல், திரைப்படங்கள், நடிகர்கள்
'மாமன்னன்' படத்தைத் தொடர்ந்து தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் 'கலகத் தலைவன்' படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கவுள்ளார். இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் அடுத்ததாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கமல் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று (25-07-2022) சென்னையில் நடைபெற்ற ரெட் ஜெயண்ட் மூவிஸின் 15 வருட சினிமா பயணத்தை கொண்டாடும் விழாவில் கமல்ஹாசன் வெளியிட்டார். இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதளப்பக்கத்தில், "15 வருட ரெட் ஜெயண்ட் மூவிஸின் சினிமா பயணத்தை கொண்டாடும் விதமாக உடன் பங்காற்றியவர்களை நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கௌரவித்தோம். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் அடுத்த படத்தின் கதை நாயகனாகும் ப...
கமல் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு  ரூ.1½ கோடி நன்கொடை !

கமல் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ரூ.1½ கோடி நன்கொடை !

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, அரசியல், சினி நிகழ்வுகள், தமிழக அரசியல், நடிகர்கள்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகளின் கூட்டம் மாங்காட்டில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சி தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு நிர்வாகிகள் மத்தியில் பேசினார். அப்போது அவர் நிர்வாகிகள் அனைவரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை சந்திக்க இப்போதே தயாராக வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் அவர் கூறும்போது, "கட்சியில் நான் செய்யாத எதையும் உங்களை செய்ய அறிவுறுத்த மாட்டேன். அந்த வகையில் எனது வருமானத்தில் இருந்து கட்சிக்காக ரூ.1½ கோடியை நன்கொடையாக வழங்குகிறேன்" என்று தெரிவித்தார். இதனை கட்சி நிர்வாகிகள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். அப்போது கட்சி நிர்வாகிகளிடம் கமல்ஹான் வேண்டுகோள் ஒன்றையும் முன்வைத்தார். உங்களால் முடிந்த தொகையை கட்சிக்கு நன்கொடையாக வழங்குங்கள். அது சிறிய தொகையாக இருந்தாலும் பரவாயில்லை என்றார். 100 ரூபாய் சம்பாதிக்கும் நப...
முதலமைச்சரை சந்தித்த  கமல்ஹாசன்!

முதலமைச்சரை சந்தித்த கமல்ஹாசன்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, அரசியல், சினி நிகழ்வுகள், செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள்
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமானு கமல்ஹாசன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று நேரில் சந்தித்து பேசினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது கமல்ஹாசன் ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அவருடன் விக்ரம் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் ஆர். மகேந்திரன் உடனிருந்தார். கமல்ஹாசன் தயாரிப்பில் திரைக்கு வந்துள்ள விக்ரம் திரைப்படம், 10 நாட்களுக்குள் உலகம் முழுவதும் ரூ.300 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் விக்ரம் திரைப்படத்தை முதல் 3 நாட்களுக்கு சிறப்பு காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, கமல்ஹாசன் சந்தித்துள்ளார். விக்ரம் படத்தின் பெருவெற்றியை தொடர்ந்து இனிய நண்பர், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன்...
வைரலாகும் சூர்யாவின் டுவிட்!

வைரலாகும் சூர்யாவின் டுவிட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'விக்ரம்'. கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கிரிஷ் கங்காதரன் இதற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பெரிய எதிர்பார்ப்புகளிடையே நேற்று திரையரங்குகளில் வெளியான 'விக்ரம்' திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே, ரோலேக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்த சூர்யாவின் கதாபாத்திரம் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுகுறித்த சூர்யா டுவிட்டர் பதிவானது தற்போது வைரலாகி வருகிறது. அதன்படி, “அன்புள்ள கமல்ஹாசன் அண்ணா எப்படி சொல்றது..!?. உங்களுடன் திரையில் இணைந்து நடிக்கும் கனவு நனவானது. இதை சாத்தியப்பட...
கருணாநிதி பிறந்தநாளன்று “விக்ரம்” படம் வெளியீடு!

கருணாநிதி பிறந்தநாளன்று “விக்ரம்” படம் வெளியீடு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக 2018-ல் விஸ்வரூபம் 2 படம் வெளியானது. நீண்ட இடைவெளிக்கு பிறகு கமல்ஹாசன் நடித்துள்ள 'விக்ரம்' படம் அடுத்த மாதம் 3ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதி, பகத் பாசில், செம்பன் வினோத், நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, சிவானி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 'விக்ரம்' திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கமலஹாசன் கலந்து கொண்டார். அப்போது பேசிய கமல்ஹாசன் கூறுகையில், “4 வருடங்களாக என் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. 4 வருடங்கள் காத்திருக்க வைத்ததற்காக எனது அன்பான ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ‘விக்ரம...