ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 16
Shadow

கமல்ஹாசனை சந்தித்த கவின்!

சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்து பிரபலமானவர் கவின்.

இதையடுத்து படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர், ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.

அதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்து கொண்டார். இதன் பின்னர் வெளியான’லிஃப்ட்’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

இதையடுத்து நடிகர் கவின் தற்போது கணேஷ் கே பாபு இயக்கத்தில் ‘டாடா’ திரைப்படத்தில் நடித்துள்ளார். ஒலிம்பியா மூவிஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் பாக்யராஜ், அபர்ணா தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகர் கவின் கமல்ஹாசனை நேரில் சந்தித்துள்ளார்.

இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள கவின் ‘இன்று கோவிலுக்கு சென்றேன்’ என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

397 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன