வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

Tag: மு.க.ஸ்டாலின்

பாரதி கலங்குவதை என்னால் தாங்க முடியவில்லை, மு.க.ஸ்டாலின் வாழ்க – இளையராஜா!

பாரதி கலங்குவதை என்னால் தாங்க முடியவில்லை, மு.க.ஸ்டாலின் வாழ்க – இளையராஜா!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா மூன்று தலைமுறையுடன் இணைந்து இசையமைத்துள்ளார். இதுவரை ஆயிரத்திற்கு மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த இளையராஜா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களுகளுக்கு இசையமைத்துள்ளார். இதையடுத்து பாரதியாரின் நினைவு நாளையொட்டி, இளையராஜா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''எல்லா வருடங்களும் எனக்கு இந்த நாளில் பாரதியாரின் நினைவு வரும். அது என்னை வருத்தும். என்னை பாரதியாரோடு ஒப்பிட்டு பார்த்து, 'நிலச்சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ? என்று அவன் தன்னை தானே நொந்துகொண்டானில்லையா? 'நல்லதோர் வீணை செய்தே – அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?' தன்னை நல்லதோரு வீணையாகவும் அவனை உருவாக்கிய அம்மையே சக்தியே என்னை நலங்கெட புழுதியில் ஏறிந்துவிடுவாயோ என அவனின் நொந்தல் என்னை வருத்தும். அவருக்கு ஆறுதல் சொல்லும்...
முதலமைச்சரை சந்தித்த  கமல்ஹாசன்!

முதலமைச்சரை சந்தித்த கமல்ஹாசன்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, அரசியல், சினி நிகழ்வுகள், செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள்
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமானு கமல்ஹாசன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று நேரில் சந்தித்து பேசினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது கமல்ஹாசன் ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அவருடன் விக்ரம் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் ஆர். மகேந்திரன் உடனிருந்தார். கமல்ஹாசன் தயாரிப்பில் திரைக்கு வந்துள்ள விக்ரம் திரைப்படம், 10 நாட்களுக்குள் உலகம் முழுவதும் ரூ.300 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் விக்ரம் திரைப்படத்தை முதல் 3 நாட்களுக்கு சிறப்பு காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, கமல்ஹாசன் சந்தித்துள்ளார். விக்ரம் படத்தின் பெருவெற்றியை தொடர்ந்து இனிய நண்பர், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன்...
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திருச்சி பயணம்!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திருச்சி பயணம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
மேட்டூர் அணை மற்றும் கல்லணைகளில் இருந்து குறுவை பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து கடைமடைப் பகுதி விவசாயத்திற்கும் தண்ணீர் சென்று சேரும் வகையில், காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நடைபெற்று வரும் ஆறுகள், வடிகால்கள், வாய்க்கால்களை தூர்வாரும் பணி நிறைவுடையும் நிலையில் உள்ளது. இந்த பணிகளை ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று திருச்சி செல்கிறார். அங்கு ஆய்வு செய்த பின்னர் கார் மூலம் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு செல்கிறார். வேளாங்கண்ணியில் மு.க.ஸ்டாலின் இரவு தங்குகிறார். நாளை காலை வேளாங்கண்ணியில் இருந்து புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாகை மாவட்டம் கருவேலங்கடையில் உள்ள கல்லாறு வடிகால் தூர்வாரும் பணிய...
மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை, திருவாரூர், நாகை உள்பட 12 டெல்டா மாவட்டங்களின் பாசனத்தேவைக்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கம். அணையின் நீர் இருப்பை பொறுத்து ஜூன் 12-ந் தேதிக்கு முன்னதாகவோ அல்லது காலதாமதமாகவோ அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் மூலம் டெல்டா பாசனத்துக்குட்பட்ட 12 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. அணையின் நீர்மட்டம் 95 அடிக்கு மேல் இருக்கும்போது வழக்கமான நாளில் தண்ணீர் திறக்கப்படும். இந்த நிலையில் நடப்பு ஆண்டு கோடை காலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக அணைகள் நிரம்பி, மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து கணிசமாக அதிகரித்தது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென உயர்ந்து கொண்...
“நெஞ்சுக்கு நீதி” படத்தை பார்த்து வாழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“நெஞ்சுக்கு நீதி” படத்தை பார்த்து வாழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  “நெஞ்சுக்கு நீதி” படத்தை பார்த்து வாழ்த்திய முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் Zee Studios - போனி கபூர் அவர்களின் Bayview Projects மற்றும் ROMEOPICTURES ராகுல் இணைந்து தயாரிக்கும் “நெஞ்சுக்கு நீதி” படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். நேற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் “நெஞ்சுக்கு நீதி” திரைபடத்தை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் திரையரங்கில் பார்த்தார். படத்தை பார்த்த பின்  “நெஞ்சுக்கு நீதி” படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் அருண்ராஜா காமராஜ், தயாரிப்பாளர்கள் போனி கபூர், ராகுல் என அனைத்து படக்குழுவினருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார், மே மாதம் 20 அன்று வெளியாகவுள்ள “நெஞ்சுக்கு நீதி” திரைப்படத்தை தமிழகமெங்கும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம்...
மாநிலங்களவை தேர்தல்: திமுக வேட்பாளர்களை அறிவித்தார் மு.க.ஸ்டாலின்!

மாநிலங்களவை தேர்தல்: திமுக வேட்பாளர்களை அறிவித்தார் மு.க.ஸ்டாலின்!

HOME SLIDER, NEWS, செய்திகள், தமிழக அரசியல்
மாநிலங்களவையில் தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.க. எம்.பி.க்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், அ.தி.மு.க.வைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் நிறைவடைகிறது. காலியாகப் போகும் இந்த 6 இடங்களுக்கும் அடுத்த மாதம் (ஜூன்) 10ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய நிலையில் ஒரு எம்.பி. வெற்றி பெற 34 எம்.எல்.ஏ.க்களின் வாக்குகள் தேவைப்படும். தமிழக சட்டமன்றத்தில் தி.மு.க.வுக்கு 159 எம்.எல்.ஏ.க்கள் உள்ளதால் 4 எம்.பி.க்கள் தி.மு.க.வுக்கு கிடைக்கும். இந்நிலையில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை கட்சியின் தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். திமுக சார்பில் தஞ்சை கல்யாணசுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார்,  கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு இடம் கூட்டணி கட்...
சென்னையில் உலக மகளிர் டென்னிஸ் போட்டி- தமிழக அரசு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு!

சென்னையில் உலக மகளிர் டென்னிஸ் போட்டி- தமிழக அரசு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
ஏ.டி.பி. டென்னிஸ் போட்டி சென்னையில் 1997ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தெற்கு ஆசியாவில் நடைபெற்று வந்த ஒரே ஏ.டி.பி. போட்டி இதுவாகும். 1997 முதல் 2001 வரை கோல்டு பிளேக் ஓபன் என்ற பெயரிலும், 2002 முதல் 2004 வரை டாடன் ஓபன், 2005 முதல் 2009 வரை சென்னை ஓபன், 2010 முதல் 2017 வரை ஏர்செல் சென்னை ஓபன் என்ற பெயரிலும் இந்தப் போட்டி நடைபெற்றது. 21 ஆண்டுகள் ஏ.டி.பி. ஆண்கள் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. 2018ம் ஆண்டு இந்த போட்டி மகாராஷ்டிர மாநிலம் புனேக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் முதல் முறையாக உலக மகளிர் டென்னிஸ் போட்டியை சென்னையில் இந்த ஆண்டு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. டபிள்யு.டி.ஏ. என அழைக்கப்படும் உலக மகளிர் டென்னிஸ் போட்டி நடைபெறும் தேதியை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று அறிவித்தார். இது தொடர்பாக ச...
கலைவாணர் அரங்கில் மேயர்கள்-துணை மேயர்கள், நகராட்சி தலைவர்களுக்கு பயிற்சி!

கலைவாணர் அரங்கில் மேயர்கள்-துணை மேயர்கள், நகராட்சி தலைவர்களுக்கு பயிற்சி!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி மேயர்கள், நகராட்சி தலைவர்கள், கடந்த 2 நாட்களுககு முன்பு மாமன்ற கூட்டத்தை நடத்தி உள்ளனர். தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் மாமன்ற கூட்டம் நடந்தாலும் பெரும்பாலான மேயர்கள் இந்த பதவிக்கு புதிது என்பதால் மன்ற கூட்டத்தை எப்படி நடத்தி செல்ல வேண்டும் என்பது பற்றி அவர்களுக்கு முழுமையாக விதிகள் பிடிபடவில்லை. இதேபோல் நகராட்சி மன்ற கூட்டங்களிலும் பல தலைவர்களுக்கு கூட்டம் நடத்துவதில் சிரமம் ஏற்பட்டது. இதையொட்டி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி தலைவர்கள், துணை தலைவர்களுக்கு நிர்வாக பயிற்சி கொடுக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பில் சென்னை, தாம்பரம், ஆவடி உள்பட 21 மாநகராட்சி மேயர்கள், துணை மே...
திருப்பூர் மாவட்டத்தில் இன்று மு.க.ஸ்டாலின் பிரசாரம்!

திருப்பூர் மாவட்டத்தில் இன்று மு.க.ஸ்டாலின் பிரசாரம்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து உள்ளாட்சியிலும் தொடரட்டும் நம்ம ஆட்சி என்ற முழக்கத்தோடு காணொலி காட்சி மூலமாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 6-ந்தேதி காணொலி காட்சி மூலம் கோவையில் பிரசாரத்தை தொடங்கிய அவர், சேலம், கடலூர், தூத்துக்குடி, ஈரோடு, குமரி ஆகிய மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டார். இந்தநிலையில் இன்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி மற்றும் உடுமலை, தாராபுரம், திருமு...
கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு பணி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்!

கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு பணி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில், மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 3 கட்டங்களாக அகழாய்வு பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன. அதன் பின்னர் 2018-ம் ஆண்டு முதல் தமிழக தொல்லியல் துறை சார்பில் 4 கட்டங்களாக அகழாய்வுகள் நடந்துள்ளன. இங்கு கிடைத்த தொல்பொருட்கள், உலக அரங்கில் தமிழர்களின் பெருமையை பறை சாற்றுகின்றன.. இதுவரை நடந்த 7 கட்ட அகழாய்விலும் சேர்த்து மொத்தம் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் கீழடி மற்றும் சுற்றுப்பகுதிகளில் 8-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை தமிழக தொல்லியல் துறை மேற்கொள்ள இருக்கிறது. இந்த பணிகளை சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக இன்று(வெள்ளிக்கிழமை) காலையில் தொடங்கி வைக்கிறார். இதற்காக கீழடியில் அலங்காரப் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்றுள்ளது. அக...