மூத்த தலைவர்களின் வாரீசு அரசியல்தான் தோல்விக்கு காரணம் – காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் ஆவேசம்
மூத்த தலைவர்களின் வாரீசு அரசியல்தான் தோல்விக்கு காரணம் - காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் ஆவேசம்
நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
அதிலும் குறிப்பாக 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரு தொகுதியைக் கூட கைப்பற்றாமல் மாபெரும் தோல்வியை தழுவியது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து காங்கிரஸ் காரிய கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாபெரும் தோல்விக்கு காரணங்கள் என்ன என்று விவாதிக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் நடத்திய அந்த ஆலோசனைக் கூட்டத்தில், மூத்த தலைவர்கள் தரப்பில் செய்த தவறுகள் குறித்தும் ராகுல் காந்தி கடும் ஆவேசமாக பேசியிருக்கிறார்.
கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்த ராகுலின் முடிவை மூத்த தலைவர்கள் ஏற்க மறுத்து விட்டனர்.
தேர்தலில் படுதோல்வி அடைந்தத...
