செவ்வாய்க்கிழமை, மே 14
Shadow

மூத்த தலைவர்களின் வாரீசு அரசியல்தான் தோல்விக்கு காரணம் – காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் ஆவேசம்

மூத்த தலைவர்களின் வாரீசு அரசியல்தான் தோல்விக்கு காரணம் – காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் ஆவேசம்

 

நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

அதிலும் குறிப்பாக 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரு தொகுதியைக் கூட கைப்பற்றாமல் மாபெரும் தோல்வியை தழுவியது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து காங்கிரஸ் காரிய கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாபெரும் தோல்விக்கு காரணங்கள் என்ன என்று விவாதிக்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் நடத்திய அந்த ஆலோசனைக் கூட்டத்தில், மூத்த தலைவர்கள் தரப்பில் செய்த தவறுகள் குறித்தும் ராகுல் காந்தி கடும் ஆவேசமாக பேசியிருக்கிறார்.

கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்த ராகுலின் முடிவை மூத்த தலைவர்கள் ஏற்க மறுத்து விட்டனர்.

தேர்தலில் படுதோல்வி அடைந்ததோடு, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி என
காந்தி குடும்பத்தினர் போட்டியிட்டு தக்கவைத்துக் கொண்ட அமேதி தொகுதியிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தோல்வியைத் தழுவியது பெரும் அதிர்ச்சியை கட்சிக்குள் ஏற்படுத்தியது.

இதற்கு காரணமாக மூத்த தலைவர்கள் மீது பகிரங்கமாக குற்றம் சுமத்திய ராகுல்
முன்னாள் மத்திய அமைச்சர்கள் தங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அதிக முக்கியத்துவம் குடுத்ததால் தான் இது போன்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

தாங்கள் நிற்க வேண்டிய இடத்தில் தங்களின் மகன்களுக்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்த ப.சிதம்பரம், மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் மற்றும் ராஜாஸ்தான் முத்ல்வர் அசோக் கெலாத் ஆகியோர் தங்களின் தொகுதியை தங்களின் வாரிசுகளுக்கு தாரை வார்த்து கொடுத்தது குறிப்பித்தக்கது.

கமல்நாத் மகன் நகுல் மற்றும் சிதம்பரத்தின் மகன் கார்த்தி ஆகியோர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் வெற்றி பெற்றனர்.

ஆனால் கெலோத்தின் மகன் வைபவால் வெற்றி பெற இயலவில்லை.

கார்த்திக்கு இம்முறை சீட் இல்லை என்றால் கட்சியில் இருந்து விலகுவேன் என்று ப.சிதம்பரம் மிரட்டினார் என்று கூறிய ராகுல் காந்தி,

தொடர்ந்து மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத்தோ, என் மகனுக்கு தொகுதியில் வாய்ப்பில்லை என்றால் நான் எப்படி ஒரு முதல்வராக நிலைத்து நிற்க முடியும் என்று கூறினார்.

ராஜஸ்தான் முதல்வரோ, மகனுடன் இணைந்து பிரச்சாரத்திற்கு சென்றுவிட்டு, 7 நாட்களாக மாநிலத் தேவைகளை கவனிக்காமல் பின் தங்கிவிட்டார் என்று கூறிய அவர், இந்த காங்கிரஸ் கட்சிக்கு ஏன் வேறு யாரேனும் தலைவராக இருக்க கூடாது என்றும் வேதனையில் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

மோடியின் ஊழலுக்கு எதிராகவும், ரஃபேல் பேர ஒப்பந்த ஊழலுக்கு எதிராகவும் எத்தனை பேர் மிகவும் முறையாக பிரச்சாரம் நடத்தி, பிரச்சனையை மக்கள் மத்தியில் யாரெல்லாம் கொண்டு போய் சேர்த்தீர்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் காந்தியின் பகிரங்கமான குற்றச்சாட்டு காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

376 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன