வெள்ளிக்கிழமை, ஜூன் 19
Shadow

நயன்தாரா படத்தில் கவர்ச்சி டான்ஸ் ஆடும் தமன்னா..!

சிரஞ்சீவியுடன் நயன்தாரா நடிக்கும் படம் சைரா நரசிம்ம ரெட்டி.

சரித்திர பின்னணியில் சுமார் 200 கோடி செலவில் பிரமாண்டமாக உருவாகும் இந்த படத்தில் அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி உள்பட பலர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் தமன்னா நடிப்பதாகவும் கூறப்பட்டது.

இப்போது படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சிக்காக தமன்னா நடனம் ஆட இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.


படத்தின் செக்சியான பாடலாக உருவாக இருக்கும் இதில் தமன்னா இதுவரை இல்லாத அளவுக்கு படுகிளாமராக நடனம் ஆட இருக்கிறாராம்.

ஐதராபாத்திலுள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் இந்த பாடலை படமாக்க இருக்கிறார்கள்.

ராம்சரண் மெகா பட்ஜெட்டில் இந்த படத்தை தயாரித்து வருகிறார்.

ஏற்கனவே பாகுபலி படத்தில் தமன்னாவின் கவர்ச்சி நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

 

2,176 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன