வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

மாஜி காதலியோடு படகில் போன சிம்பு மஹா ஷூட்டிங் சுவாரஸ்யம்..!

 

யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மஹா’. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையாக உருவாகி வரும் இந்த படத்தில் சிம்பு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பில் இயக்குனர் ஜமீல் மற்றும் ஹன்சிகாவுடன் சிம்பு இருக்கும் புகைப்படம் சமூக வைரலாகி வருகிறது.

சிம்பு – ஹன்சிகா இந்த படத்தில் கணவன் – மனைவியாக நடிப்பதாக கூறப்படுகிறது. ஹன்சிகாவின் 50-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்

வாலு படத்தில் நடித்த போது சிம்பு, ஹன்சிகா இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென இருவரும் பிரிந்துவிட்டதாக தகவல் வெளியானது.

அதன்பின்னர் இருவருமே படங்களில் கவனம் செலுத்தினாலும் ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்ளவில்லை.

இந்த நிலையில் மஹா படத்தில் ஹன்சிகா மிக சர்ச்சையான கேரக்டரில் நடித்து வருகின்றார். அந்த படத்தில் சிம்புவுக்கு மிக முக்கியமான கதாப்பாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

மஹா படத்தில் தனது முதல் நாள் காட்சியாக படகில் ஹன்சிகாவுடன் சிம்பு போகும் படங்கள் வைரலாகியுள்ளது.

மஹா படத்தில் தனது காட்சியை சிம்பு நடித்து கொடுக்க சென்றுள்ளார். காதல் தோல்வி பிரிவுக்கு பிறகு ஹன்சிகா நடிக்கும் படத்தில் சிம்பு நடிப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

324 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன