சுதந்திரதின உரையில் சீனாவின் பெயரைக் கூட சொல்லாமல் ஏன் தவிர்க்கிறார் மோடி என காங்கிரஸ் கேள்வி
சுதந்திரதின உரையில் சீனாவின் பெயரைக் கூட சொல்லாமல் ஏன் தவிர்க்கிறார் மோடி என காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.
சுதந்திர தினத்தையொட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மூவர்ண கொடி ஏற்றி, நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார்.
பல்வேறு விஷயங்கள் பற்றி பேசிய அவர், எல்லை மோதல்கள் பற்றி குறிப்பிட தவறவில்லை.
இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “இரு நாடுகளின் எல்லைகளில் நமது படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். நமது இறையாண்மைக்கு சவால் விடுக்க முயன்றவர்களுக்கு, நமது படைவீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர்” என கூறினார்.
எல்லையில் வாலாட்டும் சீனாவையும், பாகிஸ்தானையும் சாடும் விதத்தில் இந்த கருத்தினை வெளியிட்ட பிரதமர் மோடி, அந்த நாடுகளின் பெயர்களை குறிப்பிடாததை காங்கிரஸ் கட்சி சாடி உள்ளது.
டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின கொடி ஏற்றும் விழாவில் கல...
