புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

சுதந்திரதின உரையில் சீனாவின் பெயரைக் கூட சொல்லாமல் ஏன் தவிர்க்கிறார் மோடி என காங்கிரஸ் கேள்வி

சுதந்திரதின உரையில் சீனாவின் பெயரைக் கூட சொல்லாமல் ஏன் தவிர்க்கிறார் மோடி என காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.

 

சுதந்திர தினத்தையொட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மூவர்ண கொடி ஏற்றி, நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார்.
பல்வேறு விஷயங்கள் பற்றி பேசிய அவர், எல்லை மோதல்கள் பற்றி குறிப்பிட தவறவில்லை.
இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “இரு நாடுகளின் எல்லைகளில் நமது படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். நமது இறையாண்மைக்கு சவால் விடுக்க முயன்றவர்களுக்கு, நமது படைவீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர்” என கூறினார்.
எல்லையில் வாலாட்டும் சீனாவையும், பாகிஸ்தானையும் சாடும் விதத்தில் இந்த கருத்தினை வெளியிட்ட பிரதமர் மோடி, அந்த நாடுகளின் பெயர்களை குறிப்பிடாததை காங்கிரஸ் கட்சி சாடி உள்ளது.
டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின கொடி ஏற்றும் விழாவில் கலந்து கொண்ட அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா நிருபர்களிடம் பேசினார்.
அப்போது அவர், “நமது படையினர், துணை ராணுவத்தினர், போலீஸ் படையினர் மீது 130 கோடி இந்தியர்களும், அனைத்து காங்கிரஸ் தொண்டர்களும் பெருமைப்படுகிறோம். (எல்லையில்) தாக்குதல் நடந்தபோதெல்லாம், அவர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர். ஆனால், ஆட்சியாளர்கள் (பிரதமர் மோடி) சீனாவின் பெயரை சொல்வதற்கு ஏன் பயப்படுகிறார்கள் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்” என சாடினார்.
394 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன