புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

டைம்ஸ் சதுக்கத்தில் பறந்த நமது மூவர்ண தேசிய கொடி!

 

இந்தியா முழுவதும் சுதந்திர தினம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. உலகம் முழுவதிலும் வசித்து வரும் இந்தியர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்நிலையில், இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் நமது நாட்டின் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
அமெரிக்காவின் நியூயார்க், நியூஜெர்சி உள்ளிட்ட மாகாணங்களில் வசித்து வரும் இந்தியர்கள் நியூயார்க்கில் உள்ள புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் நமது நாட்டின் தேசியக் கொடியான மூவர்ண கொடியை ஏற்றினர். இதில் அமெரிக்க வாழ் இந்தியர்களும் பங்கேற்றனர்.
அமெரிக்காவின் புகழ்பெற்ற முக்கிய சுற்றுலா தலங்களில் நியூயார்க் டைம்ஸ் சதுக்கமும் ஒன்று. இங்கு மூவர்ணக் கொடி ஏற்று விழா நடப்படுவது இது முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
335 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன