செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 19
Shadow

உலகம்

இந்தியாவின் 12 கடலோர நகரங்கள் நீருக்குள் மூழ்கும் அபாயம் – நாசா எச்சரிக்கை!

இந்தியாவின் 12 கடலோர நகரங்கள் நீருக்குள் மூழ்கும் அபாயம் – நாசா எச்சரிக்கை!

HOME SLIDER, NEWS, உலகம், செய்திகள்
இந்தியாவின் 12 கடலோர நகரங்கள் நீருக்குள் மூழ்கும் அபாயம் - நாசா எச்சரிக்கை! காலநிலை மாற்றம் காரணமாக புவி வெப்பநிலை உயர்ந்து வருவதால், கடல் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்புகள் எச்சரித்து வருகின்றன. உலகளாவிய சராசரி கடல் மட்டம் ஆண்டுக்கு சுமார் 3.7 மில்லிமீட்டர் என்ற விகிதத்தில் உயர்ந்து வருகிறது. இந்நிலையில், காலநிலை மாற்றம் குறித்த அரசாங்கங்களுக்கு இடையிலான குழு (IPCC) அறிக்கையின் அடிப்படையில் கடல் நீர் மட்டம் உயர்வது குறித்த தரவுகளை, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்டு உள்ளது. அதில், 2100-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் கடலோரப் பகுதியில் உள்ள 12 கடலோர நகரங்கள் சராசரியாக 3 மீட்டர் அளவு நீருக்குள் மூழ்கும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மனித நடவடிக்கைகள் சூற்றுச்சூழலில் ஏற்படுத்தியுள்ள மோசமான பாதிப்பே இவற்றிற்கு காரணம் என தெரி...
மெக்சிகோவில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெக்சிகோவில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
மெக்சிகோவில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்! மெக்சிகோ நாட்டின் பவிஸ்பே நகருக்கு மேற்கு-தென்மேற்கில் இருந்து 26 கி.மீ. தொலைவில் நேற்றிரவு 9.19 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 5.2 ஆக பதிவாகி உள்ளது.  இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....
டெல்டா வகை கொரோனாவை சமாளிக்க தடுப்பூசி-முகக்கவசம் அவசியம்: உலக சுகாதார அமைப்பு அறிவுரை!

டெல்டா வகை கொரோனாவை சமாளிக்க தடுப்பூசி-முகக்கவசம் அவசியம்: உலக சுகாதார அமைப்பு அறிவுரை!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
டெல்டா வகை கொரோனாவை சமாளிக்க தடுப்பூசி-முகக்கவசம் அவசியம்: உலக சுகாதார அமைப்பு அறிவுரை! கொரோனா வைரஸ், பல்வேறு நாடுகளில் மரபணு மாற்றம் அடைந்துள்ளது. இங்கிலாந்து, பிரேசில், தென்ஆப்பிரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து இருக்கிறது. இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரசுக்கு டெல்டா என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் டெல்டா வகை வைரஸ் மீண்டும் உருமாற்றம் அடைந்து டெல்டா பிளஸ் வைரஸ்களும் பரவி வருகிறது. இந்த டெல்டா வகை வைரஸ் 85 நாடுகளில் பரவி உள்ளதாக தெரிவித்துள்ளனர். டெல்டா வகை வைரஸ் மிகவும் வேகமாக பரவக்கூடியது. மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ராஸ் ஆதநோம் கூறியதாவது:- டெல்டா வகை கொரோனா 85 நாடுகளில் பரவி உள்ளது. இதுவரை மக்களிடையே பரவிய கொரோனா வைரஸ் வகைகளில் டெல்டா வகை உருமாறிய கொரோனாத...
டெல்டா வைரஸ் 85 நாடுகளுக்கு பரவியது – ஆதிக்கம் செலுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

டெல்டா வைரஸ் 85 நாடுகளுக்கு பரவியது – ஆதிக்கம் செலுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
டெல்டா வைரஸ் 85 நாடுகளுக்கு பரவியது - ஆதிக்கம் செலுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை! சீனாவின் உகான் நகரத்தில் தோன்றிய கொரோனா வைரஸ், உருமாறி வருகிறது. இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் என பல நாடுகளில் உருமாறிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட ‘பி.1.617.1’ வைரசுக்கு காப்பா என்றும், ‘பி.1.617.2’ வைரசுக்கு டெல்டா என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ள ‘பி.1.1.7’ உருமாறிய வைரஸ் ஆல்பா, தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ‘பீ.1.351’ வைரஸ் பீட்டா, பிரேசில் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ‘பி.1’ வைரஸ் கமா, ‘பி.2 ’வைரஸ் ஜீட்டா என்று அழைக்கப்படுகிறது. அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வைரஸ் எப்சிலான், அயோட்டா என அழைக்கப்படுகிறது. இந்த உருமாறிய வைரஸ்கள் பற்றிய வாராந்திர தொற்றுநோயியல் அறிக்கையை உலக சுக...
இத்தாலியில் 28ந்தேதி முதல் வெளியே செல்லும் பொதுமக்கள் முக்கவசம் அணிய தேவையில்லை!

இத்தாலியில் 28ந்தேதி முதல் வெளியே செல்லும் பொதுமக்கள் முக்கவசம் அணிய தேவையில்லை!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
இத்தாலியில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளதால், வரும் 28ந்தேதி முதல் பொதுமக்கள் வெளியே செல்லும்போது முக்கவசம் அணிய தேவையில்லை என்று அறிவித்து உள்ளது. உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா தொற்றின் 2வது அலை ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. தொற்று பரவலை தடுப்பதில் தடுப்பூசி சிறப்பாக பணியாற்றுவதால், உலக நாடுகள் தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தி வருகின்றனர். இத்தாலி நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேவேளையிலர, கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளதால், அங்கு வருகிற 28ந்தேதி முதல்  பொதுமக்கள் முக கவசம் அணிய வேண்டியதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது இதுதொடர்பாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கொரோனா பாதிப்பு குறைந்த பகுதிகளில் முகக்கவசங்களை அணிவதில் இருந்து பொதுமக்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாகவும், கொரோனா பாதிப்பு உள்ள வடமேற்க...
ஜோடி சேர்வதற்காக 2 ஆயிரம் கி.மீ. பயணம் செய்த காண்டாமிருகம்!

ஜோடி சேர்வதற்காக 2 ஆயிரம் கி.மீ. பயணம் செய்த காண்டாமிருகம்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
ஜோடி சேர்வதற்காக 2 ஆயிரம் கி.மீ. பயணம் செய்த காண்டாமிருகம்! ஆப்பிரிக்காவில் வாழும் வெள்ளை நிற காண்டா மிருகங்கள் அழியும் நிலையில் உள்ளன. இந்த விலங்கினத்தை காப்பாற்றுவதற்கு தீவிர முயற்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் தைவான் நாட்டில் உள்ள உயிரியல் பூங்காவில் 5 வயதான என்மா என்ற பெயருடைய வெள்ளை பெண் காண்டா மிருகம் இருக்கிறது. அது இனப்பெருக்கம் செய்வதற்கு தைவானில் ஆண் காண்டாமிருகம் இல்லை. எனவே அதனை ஜப்பான் நாட்டுக்கு அழைத்து செல்ல முடிவு செய்தனர். ஜப்பானில் டொபு உயிரியல் பூங்காவில் மொரான் என்கிற 10 வயது காண்டாமிருகம் உள்ளது. அதனுடன் ஜோடி சேர்வதற்காக என்மா காண்டாமிருகத்தை ஜப்பானுக்கு விமானத்தில் அழைத்து சென்றுள்ளனர். ஜப்பானுக்கும் தைவானுக்கும் இடையே உள்ள தூரம் 2,160 கி.மீ. ஆகும். ஆனாலும் காண்டாமிருகம் ஜோடி சேர வேண்டும் என்பதற்காக அங்கு அழைத்து சென்றுள்ளனர். சில மாதங்கள் இரு காண...
மூன்று குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள அனுமதித்த சீனா!

மூன்று குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள அனுமதித்த சீனா!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
  தம்பதிகள் மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள சீனா அனுமதித்துள்ளது. சீனாவில், கடந்த 1979 ஆம் ஆண்டு முதல், தம்பதிகள், ஒரு குழந்தையை மாத்திரம் பெற்றுக்கொள்ள முடியும் என்ற கொள்கை நடைமுறையானது. இந்த நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டில் அந்தக் கொள்கையில் திருத்தம் கொண்டுவந்த சீன அரசாங்கம், தம்பதிகள் இரண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதற்கு அனுமதியளித்தது. எவ்வாறிருப்பினும், சீனாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளில், பிறப்பு வீதம் செங்குததான சரிவைக் காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் வருடாந்த பிறப்புகள் 2020 ஆம் ஆண்டில், தொடர்ந்து 12 மில்லியனாக குறைந்துள்ளதாக தேசிய புள்ளிவிவர பணியகம் கடந்த மாதம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தம்பதிகள் மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள அனுமதித்து சீன அரசாங்கம் அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன....
டுவிட்டருக்கு தடை..!

டுவிட்டருக்கு தடை..!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
  நைஜீரியாவில் டுவிட்டருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த நாட்டு ஜனாதிபதி மொஹமட் புஹாரி அண்மையில் டுவிட்டரில் பதிவிட்ட கருத்து நீக்கப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மொஹமட் புஹாரிக்கு எதிராக நைஜீரியாவின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ளன. இந்நிலையில் தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றவர்கள் மீது தாக்குதல் நடத்தத் தூண்டுவது போன்று அவர் பதிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. தங்களது விதிகளை மீறும் வகையில் அவர் கருத்து வெளியிட்டதாக அறிவித்த டுவிட்டர் அவரது பதிவையும் நீக்கியது. இந்நிலையில் காலவரையன்றி அந்நாட்டில் டுவிட்டர் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது...
மீண்டும் வருகிறது சூப்பர்சோனிக் விமானம்!

மீண்டும் வருகிறது சூப்பர்சோனிக் விமானம்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
மீண்டும் வருகிறது சூப்பர்சோனிக் விமானம் ஒலியைவிட வேகமாக செல்லக்கூடிய சூப்பர்சோனிக் விமானங்களை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் முயற்சியில் அமெரிக்காவின் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் இறங்கி உள்ளது. இதற்காக, அமெரிக்காவைச் சேர்ந்த பூம் நிறுவனத்திடம் இருந்து முதற்கட்டமாக 15 புதிய சூப்பர்சோனிக் பயணிகள் விமானங்களை வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ள யுனைடெட் ஏர்லைன்ஸ், 2029ம் ஆண்டு விமானம் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்துள்ளது. இந்த விமானத்தில் அட்லாண்டிக் வழித்தடத்தில் பயணித்தால் பயண நேரம் பாதியாக குறையும். உதாரணமாக, லண்டனில் இருந்து நியூயார்க் நகருக்கு 3.5 மணி நேரத்தில் செல்ல முடியும். யுனைடெட் நிறுவனத்தின் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி விமானங்களை தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. பயணிகள் விமான சேவையில் 1976ம் ஆண்டு நுழைந்...
கம்போடியாவில் பணியிலிருந்து ஓய்வுபெற்ற ராட்சத எலி!

கம்போடியாவில் பணியிலிருந்து ஓய்வுபெற்ற ராட்சத எலி!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
  கம்போடியாவில் பணியிலிருந்து ஓய்வுபெற்ற ராட்சத எலி கம்போடியாவில் வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்க 7 வயதான ஆப்பிரிக்க எலி பயிற்சி பெற்று இருந்தது. இதன் மூலம் 2 லட்சத்து 25 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் வெடிகுண்டுகளை நுகர்ந்து கண்டுபிடிக்கும் திறன்கொண்டது. தன்னார்வத் தொண்டு நிறுவனத்தால் பயிற்சி அளிக்கப்பட்ட இந்த எலியானது, கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதைப்போல, உருவத்தில் சிறியதாக இருந்தாலும், இதுவரை 71 கண்ணி வெடிகளைக் கண்டு பிடித்து பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளது. இதனால், மகவாவிற்கு கடந்த வருடம் தங்கப்பதக்கம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஏராளமான கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்து பலரின் உயிரைக் காப்பாற்றி, கம்போடியாவின் நாயகனாக வலம் வந்த ஆப்பிரிக்க ராட்சத எலி "மகவா" தன் பணியிலிருந்து ஓய்வுபெற்றது. ...