சனிக்கிழமை, ஏப்ரல் 20
Shadow

ukrain war

உக்ரைனின் பக்முத் நகரை  கைப்பற்றிய ரஷியா!

உக்ரைனின் பக்முத் நகரை கைப்பற்றிய ரஷியா!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள், செய்திகள்
உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு ஆண்டை கடந்து நீடித்து கொண்டு இருக்கிறது. இதில் உக்ரைனின் சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றின. குறிப்பாக கிழக்கு உக்ரைனை முழுமையாக தன்வசப்படுத்த ரஷியா முயற்சித்து வருகிறது. டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள பக்முத் நகரை கைப்பற்ற ரஷிய படைகள் தீவிர தாக்குதலை நடத்தி வருகின்றன. அதை எதிர்த்து உக்ரைன் ராணுவமும் சண்டையிட்டு வருகிறது. பக்முத் நகரில் ரஷிய படைகள் நடத்திய கடுமையான தாக்குதல்களால் அந்நகரம் முற்றிலும் அழிந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்தது. இந்த நிலையில் பக்முத் நகரை முழுமையாக கைப்பற்றுவதில் ரஷிய படைகள் மிக நெருக்கத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பல மாத சண்டைக்கு பிறகு பக்முத் நகரம், ரஷியா வசம் செல்லும் நிலையில் உள்ளதாகவும், அந்நகரத்தின் பெரும்பாலான பகுதிகளை ரஷியா கைப்பற்றி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ரஷியாவின்...
ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் இருந்து தாக்குதல் நடத்தும் ரஷியா!

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் இருந்து தாக்குதல் நடத்தும் ரஷியா!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள், செய்திகள்
தென் கிழக்கு உக்ரைனில் டினிப்ரோ ஆற்றங்கரையில், ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ஜபோரிஜியா அணு மின் நிலையம் அமைந்துள்ளது. தொடர் தாக்குதல்களுக்கு பிறகு இந்த அணுமின் நிலையத்தை ரஷிய படைகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தன. அங்கு உக்ரைன் ஊழியர்கள் இன்னும் பணியாற்றி வந்தாலும், அணு மின் நிலைய வளாகம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள் முழுவதும் ரஷிய படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்நிலையில், அணு மின் நிலையம் மற்றும் அந்த வளாகம் முழுவதையும் ரஷிய படைகள் தனது ராணுவ தளமாக பயன்படுத்திவருகிறது. அங்கு ஏவுகணை அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களை குவித்து வைத்துள்ள ரஷியா, அங்கிருந்தபடி சுற்றி உள்ள பகுதிகள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் அணுசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பயங்கர ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டிருப்பதால் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதாக...
இலங்கையில் நிலவும் நெருக்கடிக்கு ரஷ்யா தான் பொறுப்பு- உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி!

இலங்கையில் நிலவும் நெருக்கடிக்கு ரஷ்யா தான் பொறுப்பு- உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள், செய்திகள்
இலங்கை மட்டுமின்றி உலகம் முழுவதும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். உக்ரைன் மீதான படையெடுப்பில் ரஷ்யா பயன்படுத்திய முக்கிய தந்திரத்தில் ஒன்று பொருளாதார நெருக்கடி உருவாக்குவதாகும். விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட இடையூறு காரணமாக உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறையை அனுபவிக்கும் பல நாடுகள் ரஷியாவின் நிகழ்ச்சி நிரலை அனுபவித்துள்ளனர் என்று ஜெலென்ஸ்கி கூறினார். சியோலில் நடைபெற்ற ஆசிய தலைமைத்துவ மாநாட்டில் அண்மையில் உரையாற்றியபோது, ​​இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை எடுத்துரைத்த அவர், "அதிர்ச்சியூட்டும் உணவு மற்றும் எரிபொருள் விலையேற்றம் ஒரு சமூக பிளவுக்கு வழிவகுத்தது. அது எப்படி முடிவடையும் என்பது இப்போது யாருக்கும் தெரியாது" என்றார்....
உக்ரைனுக்கு இணையதள கருவிகளை அனுப்பிய எலான் மஸ்க்!

உக்ரைனுக்கு இணையதள கருவிகளை அனுப்பிய எலான் மஸ்க்!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள், உலகம், செய்திகள்
உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 100 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு உதவும் வகையில் நிதி மற்றும் ஆயுத உதவிகளை மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. இதேபோல் உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கும் போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டிற்கு தனது ஸ்டார்லிங்க் நிறுவனம் மூலம் செயற்கைக்கோள் வழியாக இணைய சேவைகளை வழங்கி வருகிறார். இந்நிலையில் தற்போது உக்ரைன் ராணுவம் பயன்படுத்தும் வகையில் அவர் மேலும் சில ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணையதள கருவிகளை உக்ரைனுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் உக்ரைனுக்கு சுமார் 15000 இணையதள கருவிகள் அனுப்பப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் 10000 கருவிகள் அனுப்பப்பட்டது. இத்துடன் சூரிய ஆற்றல் மூலம் மின்சாரம் பெறும் டெஸ்லா கருவிகளையும் உக்ரைன் ராணுவத்தின் பயன்பாட்டிற்காக அனுப்பியுள்ளோம் என கூறியுள்ளார்....
பிரான்ஸ்- ஜெர்மனி நாடுகளுக்கு ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை!

பிரான்ஸ்- ஜெர்மனி நாடுகளுக்கு ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள், செய்திகள்
உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் 3 மாதங்களை கடந்து நீடித்து வருகிறது. இந்த போருக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கனடா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ரஷிய படைகளின் தாக்குதல்களை சமாளிக்க உக்ரைனுக்கு ஆயுதங்களை அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் வழங்கி உதவி வருகின்றன. இதனால் ரஷிய படைகளுக்கு உக்ரைன் வீரர்கள் கடும் சவால் அளித்தனர். உக்ரைன் தலைநகர் கிவ், கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை ரஷியாவால் கைப்பற்ற முடியவில்லை. தற்போது கிழக்கு உக்ரைனை கைப்பற்ற ரஷியா தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்வதை நிறுத்த வேண்டும் என்று பிரான்ஸ், ஜெர்மனிக்கு ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான், ஜெர்மனி பிரதமர் ஒலர் ஷோல்ஸ் ஆகியோரிடம் ரஷிய அதிபர் புதின் தொலைப்பேசியில் பேசினார...
அமெரிக்காவுக்கு நன்றி கூறி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நெகிழ்ச்சி!

அமெரிக்காவுக்கு நன்றி கூறி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நெகிழ்ச்சி!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள், செய்திகள்
உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள அசோவ் உருக்காலையில் இருந்த படைவீரர்கள் 2 ஆயிரம் பேர் சரண் அடைந்துள்ளனர் என ரஷிய ராணுவ மந்திரி செர்கே லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மரியுபோல் நகரம் முழுவதும் ரஷிய படைகள் வசம் வந்துவிட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர். ரஷியாவின் பயங்கர தாக்குதலுக்கு கடும் சேதங்களைச் சந்தித்து வரும் உக்ரைனுக்கு நிதியுதவியாக 40 பில்லியன் டாலர்களை (ரூ.3.08 லட்சம் கோடி) அமெரிக்க பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன் 40 பில்லியன் டாலர் வழங்க ஒப்புதல் அளித்த நிலையில் மீண்டும் நிதியுதவி செய்ய அமெரிக்கா முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், உக்ரைனுக்கு தொடர்ந்து நிதியுதவி அளித்து வரும் அமெரிக்காவுக்கு அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார். ...
அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்த உக்ரைன் மக்கள் மீண்டும் சொந்த நாடு திரும்புவதாக தகவல்!

அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்த உக்ரைன் மக்கள் மீண்டும் சொந்த நாடு திரும்புவதாக தகவல்!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள், செய்திகள்
போர் காரணமாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்த உக்ரைன் மக்கள் மீண்டும் சொந்த நாட்டிற்கு திரும்பி வருவதாக உக்ரைன் எல்லை பாதுகாப்பு காவலர்கள் தெரிவித்துள்ளனர். மே 10 முதல் தினசரி 30,000 முதல் 40,000 உக்ரைன் மக்கள் வீடு திரும்புவதை எல்லை அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர் என்று உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ...
உக்ரைனின் 2வது பெரிய நகரத்தில் இருந்து பின் வாங்கும் ரஷியா!

உக்ரைனின் 2வது பெரிய நகரத்தில் இருந்து பின் வாங்கும் ரஷியா!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள், செய்திகள்
உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 81 நாட்களாக நடைபெற்று வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களை முற்றுகையிட்டுள்ள ரஷியா பல்வேறு வகையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. உக்ரைனும் மேற்கத்திய நாடுகளின் ஆயுத உதவிகளை கொண்டு ரஷியாவிற்கு தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. ரஷியா சில வாரங்களுக்கு முன் மரியுபோல் நகரத்தை பிடித்ததாக அறிவித்தது. அதேபோன்று உக்ரைனின் 2வது மிகப்பெரிய நகரமான கார்கீவ் நகரத்தின் மீது ரஷியா தொடர் தாக்குதல்களை நடத்தியது. ஏவுகணை தாக்குதல், டாங்கிகள் மூலம் தாக்குதல் என பல்வேறு தாக்குதல்களை கார்கீவ் நகர் மீது நடத்திய நிலையில், தற்போது அந்நகரத்தில் இருந்து தனது துருப்புகளை பின்வாங்குவதாக ரஷியா அறிவித்துள்ளது. கார்கீவ்வில் இருந்து பின்வாங்கும் ரஷியா, தனது வணிக பாதைகளை காப்பதற்காக, கிழக்கு மாகாணத்தில் அமைந்திருக்கும் டொனெட்ஸ்க் மீது பல்முனை தாக்குதல் நடத்த உள்ளதாக தெரிவித்துள...
கார்கீவ்வில் ரஷிய படைகளை துரத்தியடித்த உக்ரைன் படைகள்!

கார்கீவ்வில் ரஷிய படைகளை துரத்தியடித்த உக்ரைன் படைகள்!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள், செய்திகள்
ரஷியா- உக்ரைன் போர் கடந்த 77-வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் பல முக்கிய நகரங்களை ரஷியா கைப்பற்றி தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் மரியுபோல் நகரத்தை ரஷியா கைப்பற்றியதாக அறிவித்தது. அதன் உருக்கு ஆலையை கைப்பற்றுவதற்கு ரஷியா தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதேபோல உக்ரைனின் கார்கிவ் நகரத்தின் பல முக்கிய பகுதிகளை ரஷியா கைப்பற்றி இருந்தது. போரின் தொடக்கத்திலேயே கார்கிவ் ரஷியாவின் பிடியில் சிக்கியது. இந்நிலையில் தற்போது உக்ரைனுக்கு அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஆயுதம் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றன. இதனால் போரில் உக்ரைன் பல இடங்களில் முன்னேற்றம் கண்டுள்ளது. இதன்படி ரஷ்யா ஆக்கிரமித்த கார்கிவ் நகரத்தின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் உள்ள பல கிராமங்களை உக்ரைன் படைகள் மீண்டும் கைப்பற்றியதாக அந்நாட்டின் செய்தித் தொடர்பாளர் டெட்டியானா அபட்செங்...
உக்ரைன் ரஷியா இடையே சமாதான பேச்சுவார்த்தை- இத்தாலி வலியுறுத்தல்!

உக்ரைன் ரஷியா இடையே சமாதான பேச்சுவார்த்தை- இத்தாலி வலியுறுத்தல்!

HOME SLIDER, NEWS, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள், செய்திகள்
உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷியா மற்றும் அந்நாட்டிற்கு ஆதரவு தெரிவித்துள்ள பெலாரஸ் நாட்டின் மீதும் பொருளாதார வர்த்தக தடைகளை பிரிட்டன் அறிவித்துள்ளது.  1.7 பில்லியன் பவுண்டகள் மதிப்பில் இந்த பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இறக்குமதி வரிகள் அதிகரிப்பு மற்றும் ஏற்றுமதி தடைகள் உள்ளிட்டவை இதில் அடங்கும். இது புதின் போர் நடவடிக்கைகளை பலவீனப்படுத்தும் என்றும்,  உக்ரைன் மக்களுக்கு எதிரான அவரது சட்டவிரோதப் படையெடுப்பை தடுக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய நாங்கள் உறுதியாக உள்ளோம் என்றும் சர்வதேச வர்த்தகத்திற்கான இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் ஆன்-மேரி ட்ரெவெல்யன் தெரிவித்தார். ரஷியா-உக்ரைன் போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவரும் வகையில், இரு நாடுகள் இடையே சமாதான பேச்சுவார்த்தை மீண்டும் தொடர எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று ஜி-7 நாடுகள் ஆலோசனை கூட்டத்தில் பேசி...