
உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷியா மற்றும் அந்நாட்டிற்கு ஆதரவு தெரிவித்துள்ள பெலாரஸ் நாட்டின் மீதும் பொருளாதார வர்த்தக தடைகளை பிரிட்டன் அறிவித்துள்ளது. 1.7 பில்லியன் பவுண்டகள் மதிப்பில் இந்த பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இறக்குமதி வரிகள் அதிகரிப்பு மற்றும் ஏற்றுமதி தடைகள் உள்ளிட்டவை இதில் அடங்கும். இது புதின் போர் நடவடிக்கைகளை பலவீனப்படுத்தும் என்றும், உக்ரைன் மக்களுக்கு எதிரான அவரது சட்டவிரோதப் படையெடுப்பை தடுக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய நாங்கள் உறுதியாக உள்ளோம் என்றும் சர்வதேச வர்த்தகத்திற்கான இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் ஆன்-மேரி ட்ரெவெல்யன் தெரிவித்தார்.
ரஷியா-உக்ரைன் போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவரும் வகையில், இரு நாடுகள் இடையே சமாதான பேச்சுவார்த்தை மீண்டும் தொடர எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று ஜி-7 நாடுகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய இத்தாலி பிரதமர் மரியோ ட்ராகி வலியுறுத்தி உள்ளார்.
இந்த போர் உக்ரைனின் தானிய உற்பத்தியை பாதிக்கிறது என்றும், உணவு நெருக்கடி ஆபத்தில் உள்ள ஏழை நாடுகளுக்கு உதவ ஜி-7 அமைப்பு தொடர்ச்சியான அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
270 Views
