செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 28
Shadow

4 பெட்ரூம், 8 மனைவிகள் – அட்டவணை போட்டு படுக்கையை பகிரும் தாய்லாந்து ஹீரோ.!

 

ஒன்ன வைச்சி ஒழுங்கா வாழுறதுக்கே வழியில்ல… ஒருத்தன் 8 பேரோட ஒரே வீட்டுல சந்தோஷமா வாழ்ந்தா… கேக்கவே செமய்யா இருக்கில்ல…
தாய்லாந்தில் வசிக்கும் டாட்டூ கலைஞர் ஒருவர் தனது எட்டு மனைவிகளுடன் மகிழ்ச்சியாக வாழும் செய்தி உலகம் முழுக்க உள்ள பெருசுகள் முதல் சிறுசுகள் வரையில் வயிறு எரிய வைத்துள்ளது… யார்ரா அவன் ? எட்டு பேரா ? எப்படி ? எப்படி ?எனக்கே அவன பார்க்கனும் போல இருக்கு என ஆர்வத்துடன் கேட்க்கின்றனர்.

தாய்லாந்து நாட்டை சேர்ந்த ஓங் டாம் சொரோட், தான் எப்படி எட்டு மனைவியரை திருமணம் செய்து அனைவருடனும் ஒரே வீட்டீல் மகிழ்ச்சியாக வாழ்கிறேன் என்பதை பற்றி ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேட்டியளித்தார், அந்நிகழ்ச்சி யூடியூப்பில் மட்டும் 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது.

நிகழ்ச்சியில் சோரோட் தனது ஒவ்வொரு மனைவியையும் அறிமுகப்படுத்தி அவர்கள் எப்படி அவரை  சந்தித்தார்கள், காதல் எப்படி மலர்ந்தது என்பதை விளக்கினார்.

தனது முதல் மனைவியான நோங் ஸ்ப்ரைட்டை ஒரு நண்பரின் திருமணத்தில் சந்தித்தாராம், கண்டதும் காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டார்.

இரண்டாவது மனைவியான நோங் எல்..லை மார்க்கெட்டில் சந்தித்துள்ளார், உடனே பேரம் படிந்து திருமணம்.

அவரது மூன்றாவது மனைவியான நோங் நானை மருத்துவமனையில் சந்தித்துள்ளார். நான்காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது மனைவிகளை முறையே Instagram, Facebook மற்றும் Tik Tok வழியாக சந்தித்து திருமணம் செய்துள்ளார்.

 

 

அவரது ஏழாவது மனைவியான நோங் பிலிம், ஃபிரா பாத்தோம் ஐ கோவிலுக்குச் சென்றபோது சந்தித்து காதல் மலர்ந்ததாம்.,

ஸ்..ஸப்பா முடியலியே…

அது சரிங்க அப்போ எட்டாவது ?

பட்டாயாவில் தனது நான்கு மனைவிகளுடன் விடுமுறையில் இருந்தபோது தனது எட்டாவது மனைவியான நோங் மாயை சந்தித்தாராம் அப்படியே அங்கேயே திருமணம் செய்து கொண்டாராம்…

இதுல பியூட்டி என்னன்னா… “நான் இருக்கும் போது இன்னொரு கல்யாணமா”…ன்னு எந்த மனைவியும் சண்டைக்கும் வரலை, கோபப்பட்டு அவங்க அம்மா வீட்டுக்கும் போகல… எப்படி இப்படி…ன்னு நம்ம யோசிக்கிறதுக்குள்ள..நாங்க பார்த்ததுலேயே ரொம்ப அக்கறையுள்ள, அறிவான, அழகான மனுஷன் இவரு தான்… ன்னு எட்டு  மனைவிகளும் சர்டிபிகேட் வேற குடுக்குறாங்க….

ஒன்னு கட்டுறதுக்கே வழியில்ல… இதுல ஒரே ஆளுக்கு 8 பேரா… இந்த கொடுமைய எங்க போய் சொல்ல… அப்படீன்னு உங்க மைண்ட் வாய்ஸ் வெளிய கேக்குது… 8 இருந்தாலும் மனுஷன் பட்டுன்னு டைம் குடுத்து வாழுறான் இல்ல அப்ப பாராட்டிட்டு தூரமா போயிடனும்!

 

 

396 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன