Tag: கார்த்தி

ரஜினி கைவிட்ட தலைப்பை  கைப்பற்றிய கார்த்தி..!

ரஜினி கைவிட்ட தலைப்பை  கைப்பற்றிய கார்த்தி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    ரஜினி கைவிட்ட தலைப்பை  கைப்பற்றிய கார்த்தி..! பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கார்த்தி நடித்து வந்த படத்துக்கு பேர் அறிவிக்கப்படாமல் இருந்தது. கார்த்தி-ராஷ்மிகா நடிக்கும் படத்தின் டைட்டிலை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்காத போதும் படத்தின் தலைப்பு ’சுல்தான்’ என தகவல்கள் வெளியாகியிருந்தன. இதனிடையே சமீபத்தில் ராஷ்மிகா வெளியிட்ட இன்ஸ்டகிராம் பதிவில் சுல்தான் படப்பிடிப்பில் இருப்பதாக பதிவிட்டிருந்தார். இதனை அறிந்த படக்குழு கடும் அதிருப்தி அடைந்தனர். இதனால் சில மணிநேரங்களில் அந்த பதிவை நீக்கிய ராஷ்மிகா, படக்குழுவினரிடமும் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்திற்கு 'சுல்தான்' என்று தலைப்பு வைத்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதே தலைப்பில் பத்தாண்டுகளுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு அனிமே‌ஷன் படத்தில் நட
தேர்தலில் நிற்காமல் ஒதுங்கி போக மிரட்டப்பட்டாரா விஷால்… நடிகர் சங்க தேர்தல் பரபரப்பு

தேர்தலில் நிற்காமல் ஒதுங்கி போக மிரட்டப்பட்டாரா விஷால்… நடிகர் சங்க தேர்தல் பரபரப்பு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  தேர்தலில் நிற்காமல் ஒதுங்கி போக மிரட்டப்பட்டாரா விஷால்... நடிகர் சங்க தேர்தல் பரபரப்பு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் ஜூன் 23ம் தேதி நடக்கிறது. முந்தைய நிர்வாகத்தை சேர்ந்த விஷாலின் பாண்டவர் அணியில் சின்ன மாற்றங்களை செய்து மீண்டும் அதே பதவிகளுக்கு பாண்டவர் அணி நிற்கிறது. விஷாலின் பாண்டவர் அணியை எதிர்த்து ஐசரி கணேஷ் தலைமையில் ஒரு அணி உருவாக்கி இருக்கிறார்கள். இந்த அணி சார்பில் இயக்குனர் பாக்யராஜ் தலைவர் பதவிக்கும், ஐசரி கணேஷ் செயலாளர் பதவிக்கும் போடியிடுகிறார்கள். இதனால் தமிழ் திரையுலகில் பெறும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இயக்குனர் பாக்யராஜ் வீட்டில் ஐசரி கணேஷ் தலைமையில் அவசர கூட்டம் நடை பெற்றது. பின்னர் பாண்டவர் அணியை எதிர்த்து நிற்கும் வேட்பாளர் பட்டியல் வெளியானது. இந்த நிலையில் ஐசரி கணேஷ் அழைப்பின் பெயரில் விஷால், கார்த்
ராட்சசி ஆன ஜோதிகா டீசர் ரிலீஸ்

ராட்சசி ஆன ஜோதிகா டீசர் ரிலீஸ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  அறிமுக இயக்குநர் எஸ்.ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ராட்சசி. ஜோதிகா தலைமை ஆசிரியராக நடித்துள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது ஜோதிகாவுடன் பூர்ணிமா பாக்யராஜ், சத்யன், ஹரிஷ் பேரடி, கவிதா பாரதி உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ராட்சசி படத்தின் டிரைலர், கார்த்தி நடித்துள்ள கைதி படத்தின் டீசரை சூர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் என்ஜிகே படத்தின் இடைவேளையின் போது திரையிடப்படுகிறது. என்ஜிகே, ராட்சசி, கைதி ஆகிய மூன்று படங்களையுமே ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது
ரசிகர்களை கவர்ந்த கார்த்தியின் கைதி டீசர்..!

ரசிகர்களை கவர்ந்த கார்த்தியின் கைதி டீசர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
  கதைகளில் கதாபாத்திரத்தில் வித்தியாசம் காட்டும் கார்த்தியும், ’சித்திரம் பேசுதடி’ நரேன் இணைந்து நடித்து வரும் கைதி படத்தின் டீசரை படத்தை தயாரித்து வரும் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. கடந்த 2017ல் அறிமுக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் படம் பாராட்டுக்களை குவித்தது. மேலும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இப்போது லோகேஷ் கனகராஜ் நடிகர் கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கி வருகிறார். டிரீம் வாரியர் சார்பில் பிரபு தயாரிக்கிறார். https://youtu.be/KPndTU16k7c லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் "கைதி" படத்தில் கார்த்தியுடன் ’சித்திரம் பேசுதடி’ நரேன், யோகி பாபு, பொன்வண்ணன், மகாநதி சங்கர், ’தலைவாசல்’ விஜய் ஆகியோர் நடித்து வருகின்றனர். அதிரடி த்ரில்லர் பாணியில் உருவாகிவரும் இப்படத்தின் டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
ஹீரோயின் நிகிலா விமலை வரவேற்று டிவீட் போட்ட கார்த்தி..!

ஹீரோயின் நிகிலா விமலை வரவேற்று டிவீட் போட்ட கார்த்தி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  கார்த்தியும் அவரது அண்ணி ஜோதிகாவும் அக்கா தம்பியாக நடிக்கும் படத்தை ஜித்து ஜோசப் இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் ஊட்டியில் நடந்து வருகிறது. கார்த்தியின் ஜோடி யார் என்பதை முடிவு செய்யாமலேயே படப்பிடிப்பு நடந்து வந்தது. இந்த நிலையில் கிடாரி, வெற்றிவேல் படங்களில் நடித்த நிகிலா விமல் கார்த்தியின் ஜோடியாக இந்த படத்தில் இணைந்திருக்கிறார். ஷூட்டிங் ஸ்பாட்டில் நிகிலா விமல் இயக்குனர் ஜித்து ஜோசப் ஹீரோ கார்த்தி பேசிக் கொண்டு இருப்பது போன்ற படங்களை தனது பக்கத்தில் வெளியிட்டு ஹீரோயின் நிகிலா விமலை வரவேற்றிருக்கிறார் கார்த்தி. இந்த படத்தின் பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோதிகா அண்ணி அக்காவாக நடிக்கும் கார்த்தி படம்..!

ஜோதிகா அண்ணி அக்காவாக நடிக்கும் கார்த்தி படம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
வயாகம்18 ஸ்டூடியோஸ்' , 'பேரலல் மைண்ட்ஸ்' இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில்  கார்த்தி அக்காவாக ஜோதிகா நடிக்கும் புதிய படம் கோவாவில் ஆரம்பம். ஜீத்து ஜோசப் இயக்குகிறார். கார்த்தி அக்காவாக ஜோதிகா நடிக்கும் பெயரிடபடாத “கார்த்தி/ஜோதிகா” இப்படத்தின் முதல் பார்வை அதிகாரப்பூர்வமாக வெளியானவுடனே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இப்படத்தை மிகவும் புகழ்பெற்ற (த்ரிஷ்யம், பாபநாசம் புகழ்) இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்குகிறார். பேரலல் மைண்ட்ஸ் புரொடக்‌ஷன் சூரஜ், ‘வயாகாம்18 ஸ்டூடியோஸ்’ உடன் இணைந்து தயாரிக்கிறார். சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க, அவருடன் ஆன்சன் பால்  (ரெமோ, மாபெரும் வெற்றிபெற்ற ஆப்ரஹாமிண்டே சந்ததிகள் புகழ்) மற்றும் இன்னும் சிலரும் விரைவில் இணைவார்கள். கோவிந்த் வசந்த் (96 புகழ்) இசையமைக்க, ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நேற்ற
கார்த்தி 19 பூஜையுடன் தொடங்கியது..!

கார்த்தி 19 பூஜையுடன் தொடங்கியது..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள்
  கார்த்தி-யின் புதிய படம் பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம். - "கார்த்தி 19" வித்தியாசமான கதை அம்சமான 'கைதி' என்ற படத்தில் நடித்து வரும் கார்த்தி, அதன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்த புதிய படமொன்றில் ஒப்பந்தமாகியிருக்கிறார். 'கார்த்தி 19' என்ற பெயரில் அழைக்கப்படும் இதற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று ஆரம்பமானது. தொடர்ந்து சென்னை மற்றும் பல பகுதிகளில் நடைபெறும். இதற்காக சென்னையில் சில இடங்களில் பெரிய செட் போடப்படுகிறது. அதிகபொருள் செலவில் இப்படத்தை 'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' சார்பில் S.R.பிரகாஷ்பாபு, S.R.பிரபு தயாரிக்கிறார்கள். எமோஷன், ஆக்‌ஷன் கலந்த காமெடி கதையான இப்படத்தில், கார்த்தி ஜோடியாக ரஷ்மிகா மண்டன்னா தமிழில் அறிமுகமாகிறார். இவர்களுடன் யோகி பாபு மற்றும் பலர் நடிக்கிறார்கள். பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்தி
கார்த்தி-விஜய்சேதுபதி உள்ளிட்ட 201 பேருக்கு கலைமாமணி விருது

கார்த்தி-விஜய்சேதுபதி உள்ளிட்ட 201 பேருக்கு கலைமாமணி விருது

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
2011ம் ஆண்டு வரை வழங்கப்பட்டு வந்த கலைமாமணி விருதுகள், கடந்த 8 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் மொத்தம் 8 ஆண்டுகளுக்கான கலைமாமணி உள்ளிட்ட கலைத்துறைக்கான உயரிய விருதுகளை பெறும் கலை வித்தகர்கள், திரைக் கலைஞர்கள், நாடகக் கலைஞர்கள் குறித்த விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2011ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளுக்கு நடிகர்கள் பாண்டு, ஆர். ராஜசேகர், நடிகை குட்டி பத்மினி, பிண்ணனிப் பாடகி பி.எஸ். சசிரேகா, நடன இயக்குநர் புலியூர் சரோஜா உள்ளிட்ட பல்வேறு கலைத்துறை சார்ந்த 30 கலை வித்தகர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து 2012ம் ஆண்டுக்கான விருதுகள் பட்டியலில் நடிகைகள் டி. ராஜஸ்ரீ, பி.ஆர். வரலட்சுமி, இயக்குநர் சித்ரா லட்சுமணன் உள்ளிட்ட, பல்வேறு கலைப்பிரிவுகளை சேர்ந்த 30 பேருக்கு கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2013ம் ஆண்டுக்காக, நடிகர்கள் பிரசன்னா, ஆர். பாண்டி
கார்த்திக்கு ஜோடியாகும் ராஷ்மிகா!

கார்த்திக்கு ஜோடியாகும் ராஷ்மிகா!

CINI NEWS, செய்திகள்
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ரெமோ படத்தினை இயக்கியவர் பாக்யராஜ் கண்ணன். இவர் அடுத்ததாக கார்த்தி நடிக்கும் 19வது படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர் கடந்த வருடம் தெலுங்கில் வெளியாகி சூப்பர்ஹிட்டான கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். விவேக்-மெர்வின் இந்த படத்திற்கு இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.ஆர்.பிரபு மற்றும் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு இந்தப்படத்தை தயாரிக்கின்றனர். கார்த்தி தற்போது நடித்துவரும் அவரது 18வது படத்தை மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.