3 டன் விண்வெளி குப்பை நாளை நிலவில் மோதுகிறது!
பல உலக நாடுகளால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்கள், விண்கலங்கள் உள்ளிட்டவை காலாவதியான பின் விண்வெளி குப்பையாக சுற்றி வருகின்றன.
இப்படி விண்வெளியில் சுழன்று வரும் இத்தகைய குப்பைகள் பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்துவது ஒருபுறம் இருக்க, எதிர்கால விண்வெளி முயற்சிகளையும் மிகவும் கடினமாக்கும் என விஞ்ஞானிகள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சுமார் 3 டன் எடைகொண்ட விண்வெளி குப்பை மார்ச் 4-ந்தேதி நிலவின் மீது மோதும் என கடந்த ஜனவரி மாதம் நாசா அறிவித்தது.
கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தால் அனுப்பப்பட்ட ‘பால்கன்9’ ராக்கெட்டின் மேல்பகுதியான ‘பூஸ்டர்’ தான் நிலவின் மீது மோத இருப்பதாக நாசா முதலில் தெரிவித்தது.
பின்னர், நிலவில் மோதும் ராக்கெட் ஸ்பேஸ் எக்ஸ் உடையது அல்ல என்றும், அது நிலவில் இருந்து மாதிரிகளை சேகரித்து வருவதற்காக சீன விண்வெளி ஆய்வு மைய...
