தென்மேற்கு பருவமழை- தென் தமிழகத்தில் கூடுதல் மழை பொழிவுக்கு வாய்ப்பு!
இந்தியா முழுவதும் தென்மேற்கு பருவமழை காலத்தில் தான் அதிக மழை பொழிவு கிடைக்கும்.
தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் வாரம் கேரளாவில் தொடங்கும். அதன்பின்பு படிப்படியாக கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு பரவி மழை பொழிவை அளிக்கும்.
இதனால் இந்திய வானிலை ஆய்வு மையம் தென்மேற்கு பருவமழை எப்போது தொடங்குகிறது என்பதை உன்னிப்பாக கவனித்து வரும்.
அதன்படி அந்தமான் தீவுகளில் தான் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படும். கடந்த சில நாட்களாக இதற்கான அறிகுறிகள் அந்தமான் கடல் பகுதியில் தென்பட்டது.
இதையடுத்து இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தினர் கூறி இருந்தனர்.
தற்போது அந்தமான் தீவுகளில் பருவ மழை பெய்ய தொடங்கி உள்ளது. இதையடுத்து வருகிற 27ந் தேதி முதல் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்தி...
