‘கொஞ்சம் பேசினால் என்ன’ படத்தின் டீசரை வெளியிட்ட விக்னேஷ் சிவன்!
'தும்பா' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான கீர்த்தி பாண்டியனும், 'நான் மகான் அல்ல' புகழ் வினோத் கிஷனும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'கொஞ்சம் பேசினால் என்ன'.
இப்படத்தை அறிமுக இயக்குனர் கிரி மர்பி இயக்கியுள்ளார். இந்த படத்தில் யூடியூப் பிரபலமான ஆஷிக், செபாஸ்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சூப்பர் டாக்கீஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு தீபன் சக்கரவர்த்தி இசையில் லெனின் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் 'கொஞ்சம் பேசினால் என்ன' படத்தின் டீசரை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
வாழ்க்கையில் மீண்டும் சந்திக்கும் பள்ளி நண்பர்கள் இருவர் காதலிப்பதை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://twitter.com/VigneshShivN/status/1565294502327160834?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembe...
