கட்சி அலுவலகம், கல்லூரியை கொரானா சிகிச்சை மையமாக மாற்றி கொள்ளுங்கள் – விஜயகாந்த் அறிவிப்பு
தேமுதிக அலுவலகம், ஆண்டாள் அழகர் கல்லூரியை கொரானா தற்காலிக சிகிச்சை மையமாக மாற்றிக் கொள்ளலாம் - விஜயகாந்த் அறிவிப்பு
கொரோனா சிகிச்சைக்கு தேமுதிக தலைமை அலுவலகம், கல்லூரியை பயன்படுத்திக் கொள்ளலாம் என அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்து உள்ளார்.
இந்நிலையில், தங்களால் முடிந்த நிதியுதவியை அளிக்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்தார்.
அதோடு காலியாக உள்ள கட்டிடங்களை தற்காலிக சிகிச்சை மையங்களாக மாற்றிக் கொள்ள தரும்படி கேட்டிருந்தார்கள்.
இதனையடுத்து, கொரோனா சிகிச்சைக்காக திமுக அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கையும், நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல் தனது ஆழ்வார்பேட்டை அலுவலகத்தையும், இடதுசாரி கட்சிகள் தங்கள் அலுவலகத்தையும் பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவித்தார்கள்.
இப்போது அந்த வரிசையில் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் தனது அலுவலக...
