புதன்கிழமை, ஜூன் 10
Shadow

Tag: கொள்ளைக்கார அரசு

கொள்ளை நோய்… அரசின் தொடர் கொள்ளை… வெகுண்டெழு தமிழகமே, வேறு தலைமை தேடு – கமல் ஆவேசம்!

கொள்ளை நோய்… அரசின் தொடர் கொள்ளை… வெகுண்டெழு தமிழகமே, வேறு தலைமை தேடு – கமல் ஆவேசம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
நடிகர், மக்கள் நீதி மய்ய தலைவர கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கை: தமிழர்காள் வணக்கம். ஒரு வைரஸ் கிருமிக்கு இருக்கும் உயிர் வாழும் ஆசை கூட, தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்காது என திண்ணமாக நம்பும் ஒரு அரசு நமக்கு வாய்த்தது ஏன்? ஓட்டுக்கு காசு வாங்கி, 5 வருடம் நம் வாழ்வை இவர்களுக்கு குத்தகைக்கு விட்டோமே அதன் விளைவு தான். பஞ்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டில், மதுக்கடைகளை திறந்து விட்டால் மக்களின் கவனம் திரும்பிவிடும் என நம்பும் அரசுக்கு பெயர் “அம்மாவின் அரசா” ? தாயுள்ளம் கொண்டோர் அனைவருக்கும் அவமானமல்லவா அது? இலவசமாக எத்தனை தாலிகள் தந்தாலும், வேலையில்லாத குடிகாரன் வீட்டுத் தாலி பறிக்கப்பட்டு, அடகுக்கடைக்கு போகும், பின் அரசு நடத்தும் சாராய கடைகள் மூலம் அரசுக்கே வந்து சேரும் என்று தெரியும் தமிழ் நாட்டை ஆள்பவர்களுக்கு. ஓட்டுக்கு இத்தனை ஆயிரம், விலையில்லா பொருள் இத்தனை ஆயிரம் ...