கடும் தண்ணீர் பஞ்சம் 28ல் தொடங்கும் சட்டசபை கூட்டத்தொடரில் எதிரொலிக்குமா…
தமிழக சட்டப்பேரவை 28ல் கூடுகிறது. கடும் தண்ணீர் பஞ்சம், சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் என சட்டசபை கூட்டத் தொடர் கடும் அமளியாக இருக்கும் என தெரிகிறது.
தமிழகத்தில் காலியாக இருந்த 22 தொகுதிகளுடன்
சமீபத்தில் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டது.
அதில் 13 இடங்களில் தி.மு.க.வும், 9 இடங்களில் அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றன.
இதற்கிடையே சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர தி.மு.க. சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே சட்டசபை கூடியதும் சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் எடுத்து கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சட்டசபை கூட்டம் எப்போது கூட்டப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
தமிழக சட்டசபையில் 2019-2020-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் 8-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான விவாதம் பிப்ரவரி 14-ந்...
