விமல் ஜோடியாக “சண்டைக்காரி” ஆக மாறிய ஸ்ரேயா..!
ரொம்ப நாளைக்கு பின் மீண்டும் கவர்ச்சி காட்டும் நாயகியாக களம் இறங்கி இருக்கிறார் ஸ்ரேயா.
சமீபத்திய சர்ச்சை நாயகன் விமல் ஜோடியாக ஸ்ரேயா நடித்து வருகிறார்.
தி புரபோசல் என்கிற ஆங்கிலப் படத்தின் ரீமேக் படமாக உருவாகும் இந்த படத்துக்கு ‘சண்டைக்காரி’ என பேர் வைத்திருக்கிறார்கள்.
மோகினி படத்துக்கு பின் அமைதியாக இருந்த ஆர்.மாதேஷ் இயக்கத்தில் இந்த சண்டைக்காரி படத்தின் முதல் ,கட்டப்படப்பிடிப்பு லண்டனில் முடிந்து விட்டது.
மோகினி படமும் பெரும்பாலும் லண்டனில் தான் நடந்தது.
தி புரோபோசல் படத்தின் ரீமேக் ஏற்கனவே மலையாளத்தில் மை பாஸ் என்ற பெயரில் திலீப் நடிப்பில் வெளியானது குறிப்பிடத்தக்கது....
