சுஷாந்த்சிங் தற்கொலை பேசுகிற யாரும் விவசாயிகள் தற்கொலை செய்யும் போது எந்த குரலும் கொடுக்கவில்லையே – சரத்பவார் கேள்வி
சுஷாந்த்சிங் தற்கொலை பேசுகிற யாரும் விவசாயிகள் தற்கொலை செய்யும் போது எந்த குரலும் கொடுக்கவில்லையே - சரத்பவார் கேள்வி
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்யவில்லை. தற்கொலைக்கு தூண்டப்பட்டார் என்று அவரது குடும்பம் குற்றம் சாட்டியது. மும்பை காவல்துறை இந்த வழக்கில் சரியாக செயல்படவில்லை. வழக்குப்பதிவு செய்யவில்லை என்றும் கூறியது. சுஷாந்தின் தந்தை புகார் அடிப்படையில் பீகார் மாநில அரசு வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கு விவகாரத்தில் மகாராஷ்டிர அரசுக்கும், பீகார் அரசுக்கும் இடையில் மோதல் உருவாகியுள்ளது. மேலும், சிபிஐ விசாரணை தேவை என கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் முதன்முறையாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் அரசியல் குறித்த கருத்தை வெளியிட்டுள்...
