ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14
Shadow

Tag: சவுந்தர்யா

மீண்டும் இணையும் ‘அண்ணாத்த’ கூட்டணி!

மீண்டும் இணையும் ‘அண்ணாத்த’ கூட்டணி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மீண்டும் இணையும் ‘அண்ணாத்த’ கூட்டணி! தமிழ், தெலுங்கில் பிரபல ஒளிப்பதிவாளராக வலம்வந்த சிவா, கார்த்தி நடிப்பில் வெளியான சிறுத்தை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தொடர்ந்து 4 படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இவர் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படம் தீபாவளியன்று வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலை வாரிக்குவித்து வருகிறது. இதையடுத்து சூர்யா நடிக்கும் படத்தை இயக்க உள்ள இயக்குனர் சிவா, இப்படத்தை முடித்த பின்னர், மீண்டும் ரஜினியுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தை ரஜினியின் மகள் சவுந்தர்யா தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது....
சவுந்தர்யா விசாகனின் நீச்சல் குள படம்… பதிவிட்ட சில மணிகளில் டெலிட் செய்யப்பட்ட மர்மம்..!

சவுந்தர்யா விசாகனின் நீச்சல் குள படம்… பதிவிட்ட சில மணிகளில் டெலிட் செய்யப்பட்ட மர்மம்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  நீச்சல் குளத்திலிருந்து சவுந்தர்யா விசாகன் வெளியிட்ட படம்... சில மணிகளில் டெலிட் செய்யப்பட்ட மர்மம்..! ரஜினிகாந்த் இளைய மகள் சவுந்தர்யா விசாகன் அடிக்கடி சமூக வலை தளத்தில் ஏதாவது படத்தை பதிவிட்டு சர்ச்சையில் சிக்குவார். இப்போதும் ஒரு நீச்சல் குள படத்தை பதிவிட்டதால் கடும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். குழந்தைகளுக்கு நீச்சல் அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையில் ஒரு கருத்தை எழுதி அதற்கு ஏற்றார் போல தன் மகன் வேத் உடன் தானும் நீச்சல் குளத்தில் படுத்துக் கொண்டு ஒய்யாரமாக போட்டோவும் பதிவிட்டார். இதுதான் எல்லா சர்ச்சைக்கும் காரணமாக அமைந்தது. தமிழகத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வரும் நேரத்தில் நீச்சல் குளத்தில் ஒய்யார போஸ் அவசியமா என கடுமையான கமெண்ட்கள் வந்ததால் உடனடியாக அந்த பதிவை நீக்கினார் சவுந்தர்யா....