திங்கட்கிழமை, மே 4
Shadow

Tag: சிறப்பு பேருந்து

பொங்கல் பண்டிகை- தமிழகம் முழுவதும் 3 நாட்களுக்கு 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு!

பொங்கல் பண்டிகை- தமிழகம் முழுவதும் 3 நாட்களுக்கு 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 முதல் 14ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் 16,932 பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது. சென்னையில் இருந்து மட்டும் 10749 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இதேபோல் பொங்கல் முடிந்து திரும்புவதற்காக 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை மொத்தம் 15599 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம் பேருந்து நிலையம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், கேகே நகர் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால், 044 24749002 மற்றும் 044 26280445 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்....
ஆயுத பூஜை கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு பஸ்கள் இயக்கம்- அமைச்சர் ராஜகண்ணப்பன்!

ஆயுத பூஜை கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு பஸ்கள் இயக்கம்- அமைச்சர் ராஜகண்ணப்பன்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஆயுத பூஜை கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு பஸ்கள் இயக்கம்- அமைச்சர் ராஜகண்ணப்பன்! ஆயுத பூஜை பண்டிகை வருகிற 14-ந்தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. 15-ந்தேதி விஜயதசமி வருகிறது. தொடர்ச்சியாக சனி, ஞாயிற்றுக்கிழமை வருவதால் பொதுமக்கள் பலர் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிடுவார்கள். இதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஊரிலும் சிறப்பு பேருந்துகளை கூடுதலாக இயக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தற்போது கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வருவதால் பயணிகள் நெரிசல் மூலம் மீண்டும் தொற்று பரவல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் போக்குவரத்துத்துறை கவனமாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு பயணிகள் நெருக்கியடித்துக் கொண்டு அதிகளவில் பயணம் செய்வதை தவிர்க்க கூடுதல் பஸ்கள் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதுபோல ஆயுத பூஜைக்காக வெளியூர் செல்லும் பயணிகள் கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஒரே இடத்தில் குவிவதை தடுக்கவும் ஏற்...
சென்னையில் இருந்து 3 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கம்!

சென்னையில் இருந்து 3 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சென்னையில் இருந்து 3 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கம்! சட்டசபை தேர்தலை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வசதியாக சிறப்பு பஸ்களை அரசு போக்குவரத்து கழகங்கள் ஏற்பாடு செய்துள்ளன. நாளை (1-ந் தேதி) முதல் 5-ந் தேதி வரை சென்னையில் இருந்து தினசரி இயக்க கூடிய 2,225 பஸ்களுடன் சிறப்பு பேருந்துகளாக 3,090 என மொத்தம் 14,215 பஸ்கள் இயக்கப்படுகின்றன. கோவை, திருப்பூர், சேலம், பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 2,644 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. நாளை முதல் 3-ந் தேதி வரை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது. 4, 5-ந் தேதி ஆகிய இரண்டு நாட்கள் மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் பஸ் நிலையங்கள், தாம்பரம் ரெயில் நிலைய பஸ்நிறுத்தம், பூந்தமல்லி, கோயம்பேடு ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரி க...