கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு!
கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு!
ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சமையல் கியாஸ் சிலிண்டர்களை மத்திய அரசு மானிய விலையில் வழங்கி வருகிறது. அதன்படி ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு தலா 12 கியாஸ் சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. அதற்கான மானியத் தொகை நுகர்வோரின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. 12 சிலிண்டர்களுக்கு மேல் தேவைப்பட்டால் சந்தை விலையில் வாங்கிக் கொள்ள வேண்டும்.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றத்தைப் பொறுத்து, எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் 1-ந் தேதி, வீட்டு உபயோகம் மற்றும் வர்த்தக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர்களின் விலையை மாற்றி அமைத்து வருகின்றன.
அதன்படி 14.2 கிலோ எடையுடைய மானியம் இல்லாத வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ர...
