ஊரடங்கு நீடிப்பா… மாநில முதல்வர்களுடன் 27ம் தேதி பிரதமர் மோடி மீண்டும் ஆலோசனை!
ஊரடங்கு நீடிப்பா... மாநில முதல்வர்களுடன் 27ம் தேதி பிரதமர் மோடி மீண்டும் ஆலோசனை நடத்துகிறார்!
கொரானா என்ற கொடூர வைரசால் உலகம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்படைந்து உள்ளது. தினமும் பலி எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் 25 லட்சத்தை நெருங்கி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதையடுத்து, உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான நாடுகளும் கொரானா வைரசில் இருந்து காத்துக் கொள்ள ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன. இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு மே 3 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இந்த சூழலில் கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், வைரஸ் பரவல் குறித்தும் அனைத்து மாநில முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி வரும் 27-ம் தேதி வீடியோ கான்பரன்சில் மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே, கொரானா தடுப்...
