அண்டாவ காணோம் படத்தை OTT மூலம் ரிலீஸ் செய்வது ஏன்? தயாரிப்பாளர் விளக்கம்
சினிமா படப்பிடிப்புக்கு அனுமதியளித்த மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி என்று அறிவித்த தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷகுமார் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
அந்த அறிக்கை விவரம்:
இன்றைய திரைத்துறையின் நிலை பற்றிய எனது பார்வை!
OTT
சமீப காலங்களாக பரவலாக பரபரப்பாக பேசப்படும் தளம். இந்த தளம் சாமான்ய தயாரிப்பாளர்களுக்கு ஆனதல்ல. பெரிய பட்ஜெட் படங்கள், மிகப் பெரிய நடிகர்கள், இப்படி குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய படங்களுக்கும், குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய தயாரிப்பாளர்களுக்கும் மட்டுமே சாத்தியமாகக் கூடிய வியாபாரமாக கூடிய தளமாக கூறப்படுகிறது. அதையும் மீறி ஒரு சில படங்கள் திரையிடப்படுகின்றன, அதன் உண்மை நிலை... பங்கு சதவீத அடிப்படையில் அந்த படங்கள் திரையிடப்படுகிறது. அப்படி திரையிடப்படும் படங்களுக்கு எந்தவித விளம்பரமும், வருவாயை ஈ...
