சனிக்கிழமை, மே 2
Shadow

Tag: டிடிவி தினகரன்

புதுச்சேரியை முழு மாநிலமாக்க எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் – டிடிவி தினகரன் பிரச்சாரம்

புதுச்சேரியை முழு மாநிலமாக்க எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் – டிடிவி தினகரன் பிரச்சாரம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  புதுச்சேரி மாநில அமமுக சார்பில் ஏஎப்டி மைதானத்தில் மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்துப் பேசியது, ''புதுச்சேரியில் இதுவரை மாநில அந்தஸ்தைப் பெற்றுத்தருகின்ற விஷயத்தில் ஏற்கெனவே ஆண்ட காங்கிரஸ் அரசாக இருக்கட்டும், மத்தியில் ஆளுகின்ற பாஜக என இரண்டு கட்சிகளுமே மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்பது தான் உண்மை. கடந்த 7 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருக்கின்ற பாஜக அதற்கான எந்தவொரு முயற்சியையும் இதுவரை எடுக்கவில்லை. கடந்த நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த நாராயணசாமி, மத்தியில் பாஜக ஆட்சி இருப்பதால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்றார். அதற்கு, முன்பு அவர் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பிரதமர் அலுவலக அமைச்சராக இருந்தார். அப்போதாவது புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க முயற்சி ...
ஊரடங்கை நீடிப்பதோடு எல்லா ரேஷன்கார்டுக்கும் தலா 2 ஆயிரம் நிவாரணம் கொடுங்க என்கிறார் டிடிவி!

ஊரடங்கை நீடிப்பதோடு எல்லா ரேஷன்கார்டுக்கும் தலா 2 ஆயிரம் நிவாரணம் கொடுங்க என்கிறார் டிடிவி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அமமுக கட்சித் தலைவர் டிடிவி தினகரன் சமூக வலைதளங்கங்களில் கூறியுள்ளதாவது: 3வது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே கடுமையான பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் அடித்தட்டு மக்களுக்குக் கூடுதல் நிவாரணத்தைத் தமிழக அரசு அறிவிக்காதது ஏமாற்றமளிக்கிறது. வாழ்வாதாரத்தை இழந்திருக்கும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும், ரேசன் கார்டுதாரர்களுக்கும் குறைந்தபட்சம் ரூ.2,000/- உடனடியாக வழங்கப்பட வேண்டும். இதைப்போலவே பேரிழப்பைச் சந்தித்திருக்கும் சிறு,குறு தொழில்களுக்கான உதவித்தொகுப்பையும் மத்திய,மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும். பணியாளர்களின் ஊதியத்தில் தொடங்கி மீண்டும் செயல்படுவதற்குக்கூட நிதியில்லாமல் தடுமாறும் அத்தகைய தொழில் நிறுவனங்களுக்கு கை கொடுக்க வேண்டியதும் அரசுகளின் கடமை என்பதை ஆட்சியாளர்கள் மறந்துவிடக்கூடாது என்கிறார் டி டி வி தினகரன்...
அரசும் எதிர்க்கட்சியும் அரசியல் விளையாட்டை நிறுத்தி விட்டு மக்களை காப்பாற்றும் பணியில் கவனம் செலுத்துங்கள் – டிடிவி தினகரன் அறிக்கை

அரசும் எதிர்க்கட்சியும் அரசியல் விளையாட்டை நிறுத்தி விட்டு மக்களை காப்பாற்றும் பணியில் கவனம் செலுத்துங்கள் – டிடிவி தினகரன் அறிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    அரசும் எதிர்க்கட்சியும் அரசியல் விளையாட்டை நிறுத்தி விட்டு மக்களை காப்பாற்றும் பணியில் கவனம் செலுத்துங்கள் - டிடிவி தினகரன் அறிக்கை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கொரானா பெருந்தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் அரசியல்கட்சிகளும், தன்னார்வ சேவை அமைப்புகளும் அரசுக்கு எல்லாவகையிலும் பக்கபலமாகவே இருந்து வருகின்றன. ஆனால் 20 நாட்களாக ஊரடங்கு தொடர்வதால் பல இடங்களில் அன்றாட வருமானத்தை நம்பியிருந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏழை,எளிய மக்கள் பலரும் உணவுக்காகவும், உணவுப் பொருட்களுக்காகவும் தத்தளித்து வரும் செய்திகள் வந்தபடியே இருக்கின்றன. அதனால்தான் அவர்களுக்கு உதவ மற்றவர்கள் முன்வருகிறார்கள். ஒடிசா,கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் செய்வதைப் போன்று அரசே சமுதாய உணவகங்களை ஏற்படுத்தி பசித்த வயிறுகளுக்கு உணவிட்டிருந்தால், மற்றவர்க...