சனிக்கிழமை, மே 2
Shadow

ஊரடங்கை நீடிப்பதோடு எல்லா ரேஷன்கார்டுக்கும் தலா 2 ஆயிரம் நிவாரணம் கொடுங்க என்கிறார் டிடிவி!

 

அமமுக கட்சித் தலைவர் டிடிவி தினகரன் சமூக வலைதளங்கங்களில் கூறியுள்ளதாவது:

3வது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே கடுமையான பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் அடித்தட்டு மக்களுக்குக் கூடுதல் நிவாரணத்தைத் தமிழக அரசு அறிவிக்காதது ஏமாற்றமளிக்கிறது.

வாழ்வாதாரத்தை இழந்திருக்கும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும், ரேசன் கார்டுதாரர்களுக்கும் குறைந்தபட்சம் ரூ.2,000/- உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

இதைப்போலவே பேரிழப்பைச் சந்தித்திருக்கும் சிறு,குறு தொழில்களுக்கான உதவித்தொகுப்பையும் மத்திய,மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும்.

பணியாளர்களின் ஊதியத்தில் தொடங்கி மீண்டும் செயல்படுவதற்குக்கூட நிதியில்லாமல் தடுமாறும் அத்தகைய தொழில் நிறுவனங்களுக்கு கை கொடுக்க வேண்டியதும் அரசுகளின் கடமை என்பதை ஆட்சியாளர்கள் மறந்துவிடக்கூடாது என்கிறார் டி டி வி தினகரன்

586 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன