சனிக்கிழமை, மே 2
Shadow

Tag: டிரம்ப் இந்தியா வருகை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முழு பயணத் திட்டம்! 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முழு பயணத் திட்டம்! 

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முழு பயணத் திட்டம்! இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நாளை (திங்கள்கிழமை) பிற்பகல் அகமதாபாத்திற்கு வருகிறார். இந்தியப் பயணத்தை சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தொடங்குகிறார் டிரம்ப். பிற்பகல் 12.15 மணிக்கு அவர் சபர்மதி ஆசிரமம் செல்கிறார். இதைத் தொடர்ந்து, பிற்பகல் 1.05 மணிக்கு மோட்டேரா மைதானத்தில் நடைபெறவுள்ள நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்கும் டிரம்ப், அங்கு சுமார் 1,00,000 மக்களுக்கு முன்பு உரையாற்றுகிறார். இதையடுத்து, மாலை 3.30 மணிக்கு தன்னுடைய மனைவியுடன் ஆக்ரா வருகிறார். அங்கு மாலை 5.15 மணியளவில் இருவரும் தாஜ் மஹாலுக்குச் செல்கின்றனர். ஆக்ராவிலிருந்து மாலை 6.30 மணியளவில் டெல்லி கிளம்புகிறார். இதையடுத்து, செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகை முன்பு வழக்கமான அ...
டிரம்ப் வருகையால் இந்தியாவுக்கு பயன் இல்லையாம் – பாஜகவை வெளுக்கும் சுப்பிரமணியசாமி!

டிரம்ப் வருகையால் இந்தியாவுக்கு பயன் இல்லையாம் – பாஜகவை வெளுக்கும் சுப்பிரமணியசாமி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல் முறையாக இந்தியாவுக்கு நாளை வர உள்ளதால், இந்தியா மிகவும் பெருமைக்குரிய நாடாக இருக்கும் என பாஜகவினர் கூறி வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையால் அமெரிக்க பொருளாதாரம் உயருமே தவிர இந்தியாவுக்கு ஒரு பைசா கூட பிரயோஜனம் இல்லை என்று பாஜக எம்பி சுப்பிரமணிய சுவாமி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக எம்.பி. ஆக இருந்தாலும் சந்தர்ப்பம் அமைந்தால் பாஜகவையும், அதன் தலைவர்களையும் அவ்வப்போது கடும் விமர்சனம் செய்து வருவது சுப்ரமணியசாமி வழக்கம். சமீபத்தில்கூட ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை இந்த நூற்றாண்டின் முட்டாள்தனமான விஷயம் என்று அவர் விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகை குறித்து சுப்பிரமணியன் சாமி கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் கூறும் போது " அமெரிக்காவி...