யாகசாலை பூஜையுடன் தொடங்கியதஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா!
தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா: யாகசாலை பூஜையுடன் தொடங்கியது
உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ள தஞ்சை பெரிய கோவில் மத்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர் கள், சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் நாள்தோறும் வந்த வண்ணம் உள்ளனர்.
இந்த கோவிலை மாமன்னன் ராஜராஜ சோழன் 1010-ம் ஆண்டு கட்டினார். இந்த கோவில் கட்டி முடிக்கப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் கடந்து விட்டது. கடைசியாக 1997-ம் ஆண்டு பெரியகோவில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) நடைபெற்றது.
மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகளை கடந்து கம்பீரமாக நிற்கும் தஞ்சை பெரிய கோவில் என்று அழைக்கப்படும் பெருவுடையார் கோவிலின் குடமுழுக்கு விழா இன்று அதிகாலை யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடை...

