தஞ்சை பெரிய கோயில் புகழை சொல்லி இயக்குனர் ஆதிராஜன் எழுதிய பாடலை முதல்வர் பழனிச்சாமி வெளியிட்டார்!
மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்ட தஞ்சை பெரிய கோவில் சிறப்பு பாடல்
குடமுழுக்கு விழாவை சிறப்பிக்கும் வகையில் திரைப்பட இயக்குநர் ஆதிராஜன் எழுதியது
தமிழரின் பெருமையை உலகுக்குப் பறைசாற்றும் மிகப்பெரிய அடையாளம் தஞ்சை பெருவுடையார் கோவில் என்று அழைக்கப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம். உலகமே வியக்கும் வகையில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயம் ஆயிரத்தி பத்து ஆண்டுகள் தாண்டியும் கம்பீரமாக தமிழரின் பெருமையை பேசிக்கொண்டிருக்கிறது. இந்த கோவிலின் கும்பாபிஷேகம் 24 ஆண்டுகளுக்குப் பிறகு பிப்ரவரி 5ஆம் தேதி விமரிசையாக நடைபெறுகிறது. தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையும் மத்திய அரசின் தொல்லியல் துறையும் இணைந்து இந்த கும்பாபிஷேக விழா வை நடத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த கோவிலின் சிறப்பையும் சிவபெருமானின் அருட்கடாட்சத்தையும் தமிழர்களின் பெருமையையும...


