மோகன்லால் நடித்த லூசிபர் படம் ரூ.200 கோடி வசூல்..!
மலையாளத்தில் எப்போதும் நல்ல கதைகளை மக்கள் வெற்றி பெற வைத்திருக்கிறார்கள்.
மோகன்லால் நடித்த புலிமுருகன் முதல் தடவையாக ரூ.100 கோடி வசூல் ஈட்டியது. அதன்பிறகு நிவின்பாலி கதாநாயகனாக நடித்த காயங்குளம் கொச்சுண்ணி படமும் ரூ.100 கோடி வசூலை தொட்டது.
தற்போது பிருதிவிராஜ் இயக்கத்தில் மோகன்லால், மஞ்சுவாரியர் நடித்து கடந்த மார்ச் மாதம் திரைக்கு வந்த ‘லூசிபர்’ படம் உலகம் முழுவதும் திரையிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படம் உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.
தமிழில் லூசிபர் படத்தை தாணு தனது நிறுவனம் சார்பில் ரிலீஸ் செய்திருந்தார்.
ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம் என்ற பெருமையும் இந்த படத்துக்கு கிடைத்துள்ளது.
“இந்த பெரிய மைல்கல்லை எட்டுவதற்கு உதவிய உலக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று டுவிட்டரில் மோகன்லால...



