தாணு-முரளி-டி.சிவா மும்முனைப் போட்டியில் சினிமாவின் அடுத்த தலைமை பதவி யாருக்கு…? – கோடங்கி ஸ்பெஷல்
தமிழ் சினிமாவின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் இடமாக இருந்த முதலாளிகள் அமைப்பு... அதாங்க தயாரிப்பாளர் சங்கம் கடந்த சில ஆண்டுகளாக மேய்ப்பன் இல்லாத ஆட்டுக் கிடையாக மாறியதால்... சில தயாரிப்பாளர்களைத் தவிர பெரும்பாலான தயாரிப்பாளர்கள் பெரும் சிரமத்தில் இருக்கிறார்கள்.
முன்பெல்லாம் பட ரிலீஸ் சிக்கல் என்றாலும், ஷூட்டிங் சிக்கல் என்றாலும், நடிகர்கள் பிரச்சினை என்றாலும் என சினிமா துறையில் எந்த சிக்கல் இருந்தாலும் அதை தீர்த்து வைக்கும் இடமாக இருந்த தயாரிப்பாளர் சங்கம் ஏன் இந்த நிலைக்கு போனது.
சமீப காலத்தில் பெரும் முதலீட்டில் எடுத்த படங்களை கூட ரிலீஸ் செய்ய முடியாதபடி தடை அறிவித்த விஷயங்கள் நடக்காமல் இல்லை.
இன்றைக்கு பேசி தீர்க்க வேண்டிய விஷயங்களை நீதிமன்றம் வரை கொண்டு சென்று திரையுலகத்தை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து வருகின்றனர்.
இதற்கு முழு காரணம் திரைத்துறையை தலையாக இர...
