வைரஸ் குறைவதால் தியேட்டர்களை திறக்கும் சீனா…!
வைரஸ் குறைவதால் தியேட்டர்களை திறக்கும் சீனா...!
உலகையே முடக்கி உள்ள கொரானா வைரஸ் முதன் முதலில் சீனாவில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. அந்நாட்டில் வைரஸ் பரவத் தொடங்கிய போது மக்கள் கூடும் இடங்களான சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட அனைத்து பொழுதுபோக்கு பகுதிகளும் மூடப்பட்டன. ஆனால் தற்போது சீனாவில் கொரானா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
வைரசின் தாக்கம் குறைந்ததையடுத்து, மூடப்பட்டுள்ள தியேட்டர்களை வரும் 20 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்க சீன திரைப்பட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
வைரஸ் தாக்கம் குறைவாக உள்ள பகுதிகளில் மட்டுமே தியேட்டர்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தியேட்டருக்கு வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
பார்வையாளர்கள் அனைவருக்கும் காய்ச்சல் உள்ளதா? என சோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னரே தியேட்டருக்குள் அனுமதிக்கப்படுவர்.
தியேட்டரில் உள்ள மொத...
