பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றிய மாணவர்களை தோப்புகரணம் போட வைத்து நூதன தண்டனை!
திருத்தணி காந்தி ரோட்டில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு திருத்தணி மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இதில் சில மாணவர்கள் வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு வகுப்புக்கு செல்லாமல் ரெயில் நிலையம், பஸ் நிலையம் மற்றும் பூங்கா ஆகிய இடங்களில் ஜாலியாக சுற்றித் வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளியில் பிளஸ்- 1 மற்றும் பிளஸ்-2 படிக்கும் மாணவர்கள் 3 பேர் திருத்தணி மலைக் கோவிலில் சுற்றி திரிந்தனர்.
அப்போது மலைக்கோவிலில் தீ தடுப்பு ஒத்திகை நடத்த வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் அந்த மாணவர்களிடம் விசாரித்தார். அவர்கள் வகுப்புக்கு செல்லாமல் சுற்றிதிரிந்து வந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து மாணவர்கள் 3 பேருக்கும் 15 முறை தோப்புகரணம் போடும்படி நூதன தண்டனை கொடுக்கப்பட்டது. ஒருவர...
