வெள்ளிக்கிழமை, ஜூலை 31
Shadow

Tag: திருப்பதி

ரூ.47 கோடிக்கு ஏலம் கேட்கப்பட்ட பக்தர்களின் காணிக்கை!

ரூ.47 கோடிக்கு ஏலம் கேட்கப்பட்ட பக்தர்களின் காணிக்கை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் விரதம் இருந்து திருப்பதிக்கு வந்து நேர்த்தி கடனாக தலைமுடி காணிக்கை செலுத்துவது வழக்கம். தரிசனத்திற்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களில் தினமும் 25 ஆயிரம் முதல் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்துகின்றனர். பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தலைமுடி தரம் வாரியாக பிரித்து சேகரித்து வைக்கப்படுகிறது. பின்னர் குறிப்பிட்ட அளவு முடி சேர்ந்ததும் ஏலம் விடப்பட்டு வருகிறது. நேற்று 21 டன் எடை கொண்ட தலைமுடி ஆன்லைனில் ஏலம் விடப்பட்டது. ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தலைமுடியை ரூ.47 கோடிக்கு ஆன்லைனில் ஏலம் எடுத்ததாக திருப்பதி தேவஸ்தான பொது மேலாளர் கிருஷ்ணா ரெட்டி தெரிவித்தார். திருப்பதியில் நேற்று 66,072 பேர் தரிசனம் செய்தனர். 25,239 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.23 கோடி உண்டியலில் காணிக்க...
பலத்த மழையால் திருப்பதியில் பக்தர்கள் செல்லும் வழியில் மரங்கள் சாய்ந்தது!

பலத்த மழையால் திருப்பதியில் பக்தர்கள் செல்லும் வழியில் மரங்கள் சாய்ந்தது!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஆந்திர மாநிலம் திருப்பதியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று மாலை கருமேகங்கள் சூழ்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. லேசாக சாரல் மழை செய்தது. கோடை விடுமுறை என்பதால் தற்போது திருப்பதியில் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்து வருகின்றனர். சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் பக்தர்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். இந்தநிலையில் மாலை 5 மணிக்கு திடீரென சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது. சூறாவளி காற்று வீசியதால் மரங்கள் வேரோடு சாய்ந்தது. சாலைகள் மற்றும் மின்கம்பங்கள் மீது விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சாலைகளில் மரம் விழுந்ததால் வாகனங்கள் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். பக்தர்கள் செல்லும் வழியிலும் மரக்கிளைகள் முறிந்து விழுந்தது. மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் த...
திருப்பதி தேவஸ்தான ஆலோசனைக் குழு உறுப்பினராக ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிர்வாகி நியமனம்!

திருப்பதி தேவஸ்தான ஆலோசனைக் குழு உறுப்பினராக ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிர்வாகி நியமனம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் M.செண்பகமூர்த்தி திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) சென்னை ஆலோசனைக் குழு உறுப்பினராக (Local Advisory Committee, Chennai) நியமிக்கப்பட்டுள்ளார்.  
15ம் தேதிக்கு பிறகு திருப்பதி கோவிலில் இலவச தரிசனத்தில் பக்தர்களை நேரடியாக அனுமதிக்க திட்டம்!

15ம் தேதிக்கு பிறகு திருப்பதி கோவிலில் இலவச தரிசனத்தில் பக்தர்களை நேரடியாக அனுமதிக்க திட்டம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 15ம் தேதிக்கு பிறகு நேரடியாக இலவச தரிசனத்தில் பக்தர்களை அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கான இலவச தரிசன டிக்கெட்டுகள் தினந்தோறும் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் என பிப்ரவரி மாதத்திற்கான 1 ம் தேதி முதல் 15 ஆம் தேதி வரையிலான டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. காலை 9 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த டிக்கெட்டுகள் 8 நிமிடத்தில் அனைத்து டிக்கெட்டுக்களையும் பக்தர்கள் முன்பதிவு செய்து கொண்டனர். 15ஆம் தேதிக்கு பிறகு கொரோனா தொற்று  குறையும் என நிபுணர்கள் குழுவினர் தெரிவித்துள்ளதால் அதன் பிறகு நேரடியாக இலவச தரிசனத்தில் பக்தர்களை அனுமதிக்க திட்டமிட்டிருப்பதாக அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்....
திருப்பதியில் வி.ஐ.பி ஆகனுமா 10 ஆயிரம் குடுங்க… தேவஸ்தானம் புது முடிவு..!

திருப்பதியில் வி.ஐ.பி ஆகனுமா 10 ஆயிரம் குடுங்க… தேவஸ்தானம் புது முடிவு..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  திருப்பதியில் வி.ஐ.பி ஆகனுமா 10 ஆயிரம் குடுங்க... தேவஸ்தானம் புது முடிவு..! 10 ஆயிரம் நன்கொடை கொடுத்தால் ஒரு விஐபி டிக்கெட் வழங்கும் திட்டம் விரைவில் கொண்டுவரப்படவுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக சமீபத்தில் திருப்பதி தேவஸ்தானத்தால் அறிவிக்கப்பட்டது. இதற்கு மாற்று வழி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அறிவித்தது. இந்நிலையில் நாடு முழுவதும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில்களை அமைக்க புதிதாக உருவாக்கப்பட “ஸ்ரீ வாணி” டிரஸ்டுக்கு ரூ. 10,000 நன்கொடை அளித்தால் ஒரு விஐபி டிக்கெட் அளிக்கப்படும் என ஆந்திராவில் புதிதாக அமைந்த ஜெகன் மோகன் அரசு அறிவித்துள்ளது. சாமானிய பக்தர்களின் மீது கவனம் செலுத்துவதற்காகவும், டிரஸ்ட்டின் நன்கொடையை அதிகரிக்கவும் இந்த திட்டம் கொண்டு வர...
முதல்வராக வெற்றி பெற்ற ஜெகன் மோகன் ரெட்டி திருப்பதியில் சாமி தரிசனம்..!

முதல்வராக வெற்றி பெற்ற ஜெகன் மோகன் ரெட்டி திருப்பதியில் சாமி தரிசனம்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஆந்திராவில் நடந்த பாராளுமன்ற,  சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி நாளை ஆந்திர முதல்வராக பொறுப்பேற்கிறார். இதையொட்டி இவர் இன்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார். அவருடன் நகரி தொகுதி எம்.எல்.ஏ. நடிகை ரோஜா மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் சிலர் உடன் வந்தனர். முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வருகையையொட்டி வழி நெடுகிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கட்சியினர் பல முக்கிய சந்திப்புகளில் வரவேற்பு அளித்தனர்....