ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14
Shadow

15ம் தேதிக்கு பிறகு திருப்பதி கோவிலில் இலவச தரிசனத்தில் பக்தர்களை நேரடியாக அனுமதிக்க திட்டம்!

 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 15ம் தேதிக்கு பிறகு நேரடியாக இலவச தரிசனத்தில் பக்தர்களை அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கான இலவச தரிசன டிக்கெட்டுகள் தினந்தோறும் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் என பிப்ரவரி மாதத்திற்கான 1 ம் தேதி முதல் 15 ஆம் தேதி வரையிலான டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டது.

காலை 9 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த டிக்கெட்டுகள் 8 நிமிடத்தில் அனைத்து டிக்கெட்டுக்களையும் பக்தர்கள் முன்பதிவு செய்து கொண்டனர்.

15ஆம் தேதிக்கு பிறகு கொரோனா தொற்று  குறையும் என நிபுணர்கள் குழுவினர் தெரிவித்துள்ளதால்

அதன் பிறகு நேரடியாக இலவச தரிசனத்தில் பக்தர்களை அனுமதிக்க திட்டமிட்டிருப்பதாக அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.

253 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன