வெள்ளிக்கிழமை, ஜூன் 19
Shadow

Tag: திருவண்ணாமலை

வேட்புமனு தாக்கல் செய்ய நிர்வாணமாக வந்த விவசாயிகள்!

வேட்புமனு தாக்கல் செய்ய நிர்வாணமாக வந்த விவசாயிகள்!

HOME SLIDER, NEWS, politics
வேட்புமனு தாக்கல் செய்ய நிர்வாணமாக வந்த விவசாயிகள் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய நிர்வாணமாக வந்த விவசாயிகளால் பரபரப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து மாநில தலைவர் அய்யாக்கண்ணு உள்பட 16 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. அதையொட்டி வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான நேற்று திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் வந்தவாசி தாலுகாவைச் சேர்ந்த சக்கரபாணி, கலசபாக்கம் தாலுகா மேல்சோழங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் ஆகிய 2 விவசாயிகள் திருவண்ணாமலை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்ய பெரியார் சிலை அருகில் இருந்த...
கைலாசம் அமைந்தது… எனக்கும் தமிழ் நாட்டுக்கும் இனி தொடர்பு இல்லை – நித்தி ஓப்பன் டாக்

கைலாசம் அமைந்தது… எனக்கும் தமிழ் நாட்டுக்கும் இனி தொடர்பு இல்லை – நித்தி ஓப்பன் டாக்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கைலாசம் அமைந்தது... எனக்கும் தமிழ் நாட்டுக்கும் இனி தொடர்பு இல்லை - நித்தி ஓப்பன் டாக் தமிழ் நாட்டிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும், இனிமேல் தமிழ்நாட்டிற்கு வரபோவதில்லை என்றும் சாமியார் நித்தியானந்தா தெரிவித்துள்ளார். ஒரு புறம் நீதிமன்றத்தின் கைது வாரண்ட், மறுபுறம் கைது செய்வதற்காய் தேடி கொண்டிருக்கும் காவல்துறை என சிக்கலில் இருந்தாலும், தினம் தோறும் யூடியூப் உள்ளிட்ட வலைதளங்கள் மூலமாக தனது பக்தர்களை சந்திக்க நித்தியானந்தா தவறுவதில்லை. அந்த வகையில், அண்மையில் பக்தர்களுக்காக பேசிய சாமியார் நித்தியானந்தா, கைலாசத்திற்கான பணிகள் முடிவடைந்து விட்டதாகவும், தற்போது அது குறித்து தகவல்களை அளிக்க போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். 20 ஆண்டுகால போராட்டத்திற்கு கைலாசத்தை கட்டி அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், சில நாடுகளுடன் தூதரக ரீதியிலான உறவுகள் தொடங்கி விட்டதாகவும்...