
கைலாசம் அமைந்தது… எனக்கும் தமிழ் நாட்டுக்கும் இனி தொடர்பு இல்லை – நித்தி ஓப்பன் டாக்
தமிழ் நாட்டிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும், இனிமேல் தமிழ்நாட்டிற்கு வரபோவதில்லை என்றும் சாமியார் நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.
ஒரு புறம் நீதிமன்றத்தின் கைது வாரண்ட், மறுபுறம் கைது செய்வதற்காய் தேடி கொண்டிருக்கும் காவல்துறை என சிக்கலில் இருந்தாலும், தினம் தோறும் யூடியூப் உள்ளிட்ட வலைதளங்கள் மூலமாக தனது பக்தர்களை சந்திக்க நித்தியானந்தா தவறுவதில்லை. அந்த வகையில், அண்மையில் பக்தர்களுக்காக பேசிய சாமியார் நித்தியானந்தா, கைலாசத்திற்கான பணிகள் முடிவடைந்து விட்டதாகவும், தற்போது அது குறித்து தகவல்களை அளிக்க போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
20 ஆண்டுகால போராட்டத்திற்கு
கைலாசத்தை கட்டி அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், சில நாடுகளுடன் தூதரக ரீதியிலான உறவுகள் தொடங்கி விட்டதாகவும் நித்தியானந்தா தெரிவித்துள்ளார். அதே போன்று தன்னுடைய மரணத்திற்கு பின்னர் தனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் என்பது குறித்து உயில் எழுதி வைத்து விட்டதாகவும் நித்தியானந்தா தெரிவித்துள்ளார். அதாவது, தமிழகத்தில் உள்ள திருவண்ணாமலை, காஞ்சிபுரம், மதுரை உள்ளிட்ட ஊர்களின் குரு பரம்பரைகளுக்கு தான் சென்று சேரும் என்றும் நித்தியானந்தா பேசியுள்ளார்.

காரணம் அந்த 3 ஊர்களின் மூலமாகத்தான் தனக்கு சக்தி கிடைத்தது. தன்னிடம் இருக்கும் அனைத்தும் அந்த ஊர்களின் மூலமாகத்தான் கிடைத்தது.
இந்த வீடியோவில் தொடர்ந்து பேசி கொண்டிருக்கும் நித்தியானந்தா, தமிழகத்திற்கு தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு இனிமேல் வர போவதில்லை என்றும், தமிழக ஊடககங்களை பொறுத்தவரை தான் எப்போதோ இறந்து விட்டதாகவும் நித்தியானந்தா கூறியுள்ளார். தான் மரணம் அடைந்தால் பிடதியில் உள்ள ஆசிரமத்தில் தான் தனது உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்றும் நித்தியானந்தா கூறியுள்ளார்.
