தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி கொடுக்கலாம்- தலைவர்கள் கருத்து!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி கொடுக்கலாம்- தலைவர்கள் கருத்து!
கொரோனா தொற்று 2-ம் அலை நாடு முழுவதும் மிக வேகமாக பரவி வருவதால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
இந்தநிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளில் பலருக்கு கடுமையான சுவாசக்கோளாறு ஏற்படுகிறது. இதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கவலைப்படும் வகையில் அதிகரித்து வருகிறது.
மூச்சுத்திணறலுக்கு உள்ளாகும் கொரோனா நோயாளிகளுக்கு செயற்கை சுவாசத்துக்கான ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் சில மாநிலங்களில் ஆக்சிஜன் கிடைப்பது தாமதம் ஆகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழகத்தில் தேவைக்கு அதிகமாகவே ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக ஸ்ரீபெரும்புதூரில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் பக்கத்து மாநிலங்கள...




