ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14
Shadow

Tag: தேனி அதிகாரிகள் அலட்சியம்

கொரானாவால் இறந்த தாய் உடலை தள்ளுவண்டியில் மகனே எடுத்து சென்று  தகனம் செய்த அவலம்!!

கொரானாவால் இறந்த தாய் உடலை தள்ளுவண்டியில் மகனே எடுத்து சென்று தகனம் செய்த அவலம்!!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை தினந்தோறும் உச்சகட்ட எண்ணிக்கையில் பதிவாகி வருகிறது. அதன்படி கடந்த 24 மணிநேரத்தில் மட்டுமே 99 பேரு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள். அதையடுத்து மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,034 ஆக அதிகரித்துள்ளது. ஒரு புறம் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் மறுபுறம் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சென்னையை தாண்டி மற்ற மாவட்டங்களிலும் தொற்று பரவலின் எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் தினமும் உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த சூழலில் தேனி மாவட்டம் கூடலூர் 14 ஆவது வார்டு அழகு பிள்ளை தெருவை சேர்ந்தவர், பொன்ராஜ் மனைவி சின்னம்மாள் (வயது 80). இவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதன் காரணமாக கூடலூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு அவரது மகன் சிவனேசன் அழைத்துச் சென்றார். மருத்துவர் அவருக்கு வயிற்றுப்போக்கிற...