திங்கட்கிழமை, மே 13
Shadow

கொரானாவால் இறந்த தாய் உடலை தள்ளுவண்டியில் மகனே எடுத்து சென்று தகனம் செய்த அவலம்!!

 

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை தினந்தோறும் உச்சகட்ட எண்ணிக்கையில் பதிவாகி வருகிறது. அதன்படி கடந்த 24 மணிநேரத்தில் மட்டுமே 99 பேரு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள். அதையடுத்து மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,034 ஆக அதிகரித்துள்ளது.
ஒரு புறம் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் மறுபுறம் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

சென்னையை தாண்டி மற்ற மாவட்டங்களிலும் தொற்று பரவலின் எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் தினமும் உயர்ந்து கொண்டே வருகிறது.

இந்த சூழலில் தேனி மாவட்டம் கூடலூர் 14 ஆவது வார்டு அழகு பிள்ளை தெருவை சேர்ந்தவர், பொன்ராஜ் மனைவி சின்னம்மாள் (வயது 80). இவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதன் காரணமாக கூடலூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு அவரது மகன் சிவனேசன் அழைத்துச் சென்றார்.
மருத்துவர் அவருக்கு வயிற்றுப்போக்கிற்கு சிகிச்சை அளித்து, கொரானா பரிசோதனை செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.  பரிசோதனை முடிவில் சின்னம்மாளுக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டது.
வீட்டில் தனிமை படுத்தி வைத்திருக்கச் சொல்லி மருத்துவர்கள் அறிவுறுத்தினர் இதற்கிடையில் வெள்ளிக்கிழமை அதிகாலை சின்னம்மாள் இறந்தார். இந்த தகவலை கூடலூர் நகராட்சி சுகாதாரப் பிரிவுக்கு தெரிவிக்கப்பட்டது.

சுகாதாரத் துறையினர் உடலை எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் தெரிவிப்பாதாக சிவனேசனிடம் தெரிவித்து விட்டு சென்றனர். சுமார் 12 மணி நேரமாகியும் ஆம்புலன்ஸ் வாகனம் வரவில்லை.
இதனால் அதிருப்தியடைந்த தெருவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து உடலை எடுக்குமாறு சிவனேசனை வலியுறுத்தினர். சிவனேசன் நகராட்சி சுகாதார பிரிவிற்கு தகவல் தெரிவித்தும் அவர்களிடமிருந்து பதில் கிடைக்காதலால், விரத்தியடைந்தார்.
சிவனேசன், அவரது மகன் ராயர் ஆகியோர் வாடகைக்கு தள்ளுவண்டியை எடுத்து, கரோனா பாதிப்பால் இறந்த சின்னம்மாள் பிரேதத்தை மயானத்திற்கு எடுத்து சென்றனர்.
கொரானா தொற்று பிரேதத்தை பாதுகாப்பு இல்லாமல் தள்ள வண்டியில், முக்கிய வீதிகள் வழியாக எடுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள தொற்று எளிதாக பரவும் நிலையில் அச்சமடைந்து ஓடி ஒளிந்தனர்.
பின்னர் தகன எரிவாய மேடைக்கு கொண்டு சென்று பிரேதம் எரிக்கப்பட்டது. கொரானா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் அலட்சியமாக கொரானாவால் பாதித்த பிரேதத்தை பாதுகாப்பு இல்லாமல் கூடலூர் தெருக்களில் கொண்டு சென்றது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட நிர்வாகம் அலட்சியமாக பணியாற்றிய சுகாதார துறையினர் மீது எடுக்க கோரியுள்ளனர்.

கொரானா பரவலின் வீரியம் அதிகமாக இருக்கும் போது அதிகாரிகளின் அலட்சியம் மனிதாபிமானமற்ற கேவலமான செயலுக்கு இந்த அரசு என்ன பதில் சொல்லப் போகிறது.

259 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன