தமிழகத்தில் 37,450 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள்: தோல் துறை மாநாட்டில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
சென்னையில் இன்று காலணிகள் மற்றும் தோல் துறை மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
இம்மாநாட்டில் 2,250 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 37,450 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 5 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.
ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள்:
1. கோத்தாரி - ஃபீனிக்ஸ் அக்கார்ட் லிமிடெட் (காலணி உற்பத்தி)
2. கோத்தாரி - ஃபீனிக்ஸ் அக்கார்ட் லிமிடெட் (ஆயத்த நிலை மாதிரி சூழலமைப்பு)
3. கோத்தாரி - SEMS குழுமம் (தோல் அல்லாத காலணி உற்பத்தி)
4. வேகன் குழுமம் (தோல் அணிகலன் மற்றும் பரிசு அணிகலன்களின் உபகரணங்கள் உற்பத்தி)
5. வாக்கரூ இண்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் (தோல் அல்லாத காலணி உற்பத்தி) இத்திட்டங்கள், பெரம்பலூர் மற்றும் இராணிப்பேட்டை (பனப்பாக்கம்) மாவட்டங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.
இது...
